சாரையாக அணிவகுத்த வாகனங்கள்! தீபாவளிக்கு ஊருக்கு புறப்பட்ட மக்கள்! மேம்பாலங்களில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: தீபாவளிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை.

அதேபோல் பேருந்துகளும் கூட நிறைய அளவில் சென்றாலும் எங்கேயும் டிராபிக் பிளாக் ஆகாமல் சென்று வருகின்றன. பேருந்துகள் மெதுவாக நகர்ந்து சென்றாலும் கூட.. அப்படியே முடங்காமல்.. சிட்டி முடியும் வரை பிரச்சனை இன்றி வெளியே சென்றுள்ளன.
மேம்பாலங்கள்; பொதுவாக மேம்பாலங்களில் அதிக அளவு டிராபிக் ஏற்படும். அப்படியே வாகனங்கள் முடங்கும் நிலை ஏற்படும். நேற்றும் கூட கத்திப்பாரா உள்ளிட்ட மேம்பாலங்களில் கூட்டம் அதிகம் இருந்தது. வாகனங்கள் அதிக அளவில் சென்றது.
ஆனால் எங்குமே டிராபிக் முடக்கம் ஏற்படவில்லை . வாகனங்கள் நிற்காமல் குறைந்த வேகத்தில் ஊர்ந்தபடியே சென்றன . தமிழ்நாடு அரசின் முறையான திட்டமிடல்தான் போக்குவரத்து நெரிசலை தடுக்க காரணம் ஆகும்.
பேருந்து நிலையங்களை பிரித்து கொடுத்தது.. வேறு வேறு பிக் அப் பாயிண்டுகளை அமைத்ததுதான் இந்த போக்குவரத்து நெரிசல் குறைய காரணம் ஆகும்.
எப்படி சாத்தியம் ஆனது?: தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (09/11/2023 முதல்
பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1. மாதவரம் புதிய பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
2. கே.கே. நகர் மா.போ.பேருந்து நிலையம்: ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)
அ) திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
ஆ) தாம்பரம் இரயில் நிலையப்திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்,
பேருந்து நிறுத்தம்: போளூர். சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
4. பூவிருந்தவல்லிபேருந்து நிலையம்: பைபாஸ் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம் சாலை பேருந்து நிறுத்தம் செய்யாறு. ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி மாநகரதிருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள். போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)
5.புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர. இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை நிலையம், கோயம்பேடு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை. திண்டுக்கல். விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும்
பெங்களூரு) இங்கிருந்து செல்லும்.
சிறப்பு பேருந்து: இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்.. எப்படி புக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
இப்படி பேருந்து நிலையங்கள் பிரித்து கொடுக்கப்பட்ட காரணத்தாலேயே சென்னையில் பெரும்பாலும் பொது இடங்களில் பெரிதாக கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications