வீணாகப் போன வீக் எண்டு... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!
வாம்மா.. மின்னல்... மாதிரி வர்ரதும் தெரியாம, போறதும் தெரியாம வார இறுதி நாட்கள் சரக்குனு காணாமப் போயிடுது. வாராது வந்த மாமணி போல வாரத்தின் இடையில் வரும் ஒன்றிரண்டு விடுமுறை தினங்களும் இப்படித்தான் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் எகிறி குதித்து ஓடி மறைந்துவிடுகின்றன.
ஒரு லீவு நாள் வருதுன்னா அதுக்கு முன்னாடியே நாம என்னவெல்லாமோ திட்டம் போட்டு வைக்கிறோம். இந்த வீக் எண்டுல வீட்டை சுத்தப்படுத்திடனும், காரை கழுவிடனும், காலையில எழுந்து பீச்சில் வாக்கிங் போகணும், நண்பர்களை பார்க்கணும், பக்கத்தில இருக்கிற சொந்தக்காரங்க வீட்டுல ஒரு அட்டென்டென்சை போடணும் என ஒவ்வொருத்தரும் ஒரு கணக்கு போட்டு வைக்கிறோம். ஆனால் அந்த கணக்கெல்லாம் பலிக்கிறதா? வீக் எண்டில் நாம் நினைத்ததை எல்லாம் நினைத்தபடி செய்து முடித்துவிட முடிகிறதா என்று கேட்டால் "இல்லை" என்பதுதான் பலரின் பதிலாக இருக்கும்.

இதுக்கு என்ன தீர்வு.. நடந்தது நடந்து போச்சு, நடக்க முடியாது ஆட்டோல போச்சு என்று அசால்ட்டா விட்டுவிட வேண்டியதுதானா.. வேற என்ன பண்றது, விடுங்க சார் பார்த்துக்கலாம் என்பவர்கள் இத்தோடு இந்த கட்டுரையை படிப்பதை நிறுத்திவிடலாம். அட ஆமாங்க, இதுக்கு ஏதாவது பண்ணியே ஆகணும் என்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்.
லீவு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, விடுமுறையில் என்ன செய்யப் போகிறோம் என்பதை திட்டம் போடுங்கள் என்கிறார்கள். திட்டம் என்ற உடன், ஏதோ உலக வங்கியிடம் நிதி உதவி கேட்பதற்கு போடப்படும் பவர்பாயிண்ட் ஸ்லைட் அளவுக்கு பெருசா எல்லாம் போடத் தேவையில்லை. அதேபோல போகாத ஊருக்கு வழி சொல்வது போல, நம்மால் நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களையும் போடாதீர்கள்.

சுருங்கச் சொன்னால், இந்த விடுமுறை நாளில் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டியவை என மூன்று முக்கிய விஷயங்களை மட்டும் பட்டியலிடுங்கள். அந்த மூன்றும் கூட அதிக நேரம் பிடிக்கும் விஷயங்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், வேலைப்பளு கடினமாகி உங்களின் விடுமுறை உற்சாகமே வடிந்துபோய்விடும்.
பொதுவாக நம்முடைய வேலைகளை நான்காக பிரித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் டைம் மேனேஜ்மெண்ட் நிபுணர்கள்.
ஒன்று - அவசரமானது, முக்கியமானது
இரண்டு - அவசரமானது, முக்கியம் அல்ல
மூன்று - அவசரம் அல்ல, ஆனால் முக்கியமானது
நான்கு - அவசரமும் அல்ல, முக்கியமும் அல்ல
நாம் எந்த வேலையை தொடங்குவதற்கு முன்பும், அது இந்த நான்கில் எந்த வகை எனப் பார்க்க வேண்டும். முதல் இரண்டு வகை வேலைகளை, யாரும் சொல்லாமலே நாம் எப்படியாவது செய்துவிடுவோம். காரணம், பெரும்பாலும் இவை அலுவலக வேலையாக இருக்கும். அதனால் அலுவலக நேரத்தில் இதைத் தான் செய்துகொண்டு இருப்போம். இன்றைய செல்போன் யுகத்தில் அவசரம் என்றாலே அதை உடனே செய்ய வேண்டும் என்ற உந்துதுதல் தானாகவே வந்துவிடும். அது அவசியமா இல்லையா என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை செல்போனை எடுத்து வாட்ஸ் அப்பையும், மெயிலையும் பார்த்துக் கொண்டே இருப்பதெல்லாம் இதனால்தான். ஒருவேளை முதல் இரண்டு வகை வேலை வீட்டு வேலையாக இருந்தாலும், வீட்டு அம்மாவின் நச்சரிப்பு மற்றும் நினைவூட்டல் காரணமாக அதையும் நாம் செய்துவிடுவோம். உதாரணம், கரெண்டு பில் கட்டுவது, கேபிள் டிவி ரீசார்ஜ் போன்ற வேலைகள் எப்படியாவது உரிய நேரத்தில் நடந்து முடிந்துவிடும்.

மூன்றாவது வகை வேலைதான் பெரும்பாலும் அப்படியே நின்றுவிடும். உதாரணத்திற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டே இருப்போம். ஆனால் அதற்காக நேரம் ஒதுக்கி வாங்கவே மாட்டோம். எங்காவது குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிடும்போது, இது அவசர வேலையாக கண்முன் வந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும். மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஏதாவது பிரச்னை வந்து ஆஸ்பிட்டலில் போய் படுக்கும் வரை இதை நாம் செய்யவே மாட்டோம். மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை கழுவ வேண்டும் என்று பல மாதங்களாக நினைப்போம். ஆனால் தண்ணீர் கருப்பாக மாறி, துர்நாற்றம் எடுக்கும் வரை அதை செயல்படுத்த களத்தில் இறங்கவே மாட்டோம்.
நான்காவது வகை வேலையாக இருந்தால், அதில் பிடித்ததை மட்டும் செய்வோம், பிடிக்காததை விட்டுவிடுவோம். உதாரணத்திற்கு, நம்மிடம் இருக்கும் பழைய துணிகளை எடுத்து பிரித்து வைப்பது, வீட்டின் ஒரு பகுதியை சுத்தப்படுத்துவது, பழைய புத்தகங்களை எடுத்து தூசி தட்டி சீராக அடுக்கி வைப்பது என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் அவரவர் மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்வார்கள், மற்றதை அப்படியே கிடப்பிலேயே போட்டுவிடுவார்கள். இந்த பழக்கம் நமக்கு இல்லாவிட்டால் பரண் என்ற ஒன்று பிறந்தே இருக்காது.
சரி, இப்போ மேட்டருக்கு வருவோம். விடுமுறை நாளில் இந்த மூன்றாவது, நான்காவது வகை வேலை ஏதாவது செய்ய வேண்டியிருந்தால் அதை பட்டியலிடுங்கள். அதில் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இரண்டு வேலையையும், கடியான ஒரு வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று வேலைக்கும் சேர்த்து அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேல் தேவைப்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அரைநாளில் இதை முடித்துவிட்டு மிச்ச அரைநாளில் அக்கடா என ஓய்வெடுக்க முடியும். இப்படி திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்தால், அடுத்த சில மாதங்களில் நிலுவையில் இருந்த பல வேலைகளை நீங்கள் முடித்திருப்பீர்கள்.

விடுமுறை என்பதே ஓய்வாக கால் போன போக்கில் போய், மனம் போன போக்கில் கழிக்க வேண்டிய நாள்தானே, அதுக்கு எதுக்கு திட்டமிடல் என்று நீங்கள் கேட்கலாம். விடுமுறை என்பது நம்முடைய அன்றாட செக்குமாட்டு வேலையில் இருந்து நமக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு. தினமும் அலுவலகம் சென்று அன்றாட பஞ்சாயத்துகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பும்போது, உடலும் மனமும் அலுத்து சலித்துப் போய்விடும். வாழ்க்கையின் அடுத்த கட்டங்களை பற்றி சிந்திக்க கூட தோன்றாது. அதற்காக அதைப் பற்றி சிந்திக்காமலே ஓடிக் கொண்டிருந்தால், நாம் வாழ்வில் நின்ற இடத்திலேயேதான் நின்றுகொண்டிருப்போம். இதில் இருந்து பிரேக் எடுத்து அடுத்தகட்டத்தை சிந்திப்பதற்காக நமக்கு கிடைத்திருப்பவைதான் விடுமுறை நாட்கள்.
விடுமுறையை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் மட்டும் செலவிடுவது என முடிவு செய்து செயல்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் அதன் அருமை உங்களுக்கு முழுமையாகப் புரியும். ஞாயிற்றுக்கிழமை மதியம் குடும்பமே களத்தில் இறங்கி சமைத்துப் பாருங்கள், அந்த உணவின் ருசியே தனிதான். வீட்டில் உள்ள நண்டு, சிண்டு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தேவையற்ற பொருட்களை எடுத்து ஓரங்கட்டும் வேலையை செய்துபாருங்கள். கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு அழகிய நினைவை கிளறிவிடும். இந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது.
விடுமுறை என்பது சீக்கிரம் உருகிவிடும் ஐஸ்க்ரீம் போன்றது, அதை ரசித்து ருசிக்காவிட்டால் அது தானே வீணே கரைந்து போய்விடும் (பழமொழி சொன்னா அனுபவிங்க பாஸ்.. உள்ளே போய் ஆராயாதீங்க).
- கௌதம்
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications