உசுரை பிடிச்சிக்கிட்டு ஓடினாரே! அவருக்கே இந்த நிலையா? மருத்துவமனையில் விஜயகாந்த்! கண்டுக்காத தலைகள்
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்கள்: விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல்நிலையை பல அரசியல் தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விஜயகாந்த் உடல்நிலையை நேரில் கண்காணித்து வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்,ம் பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் உடல்நிலையை பற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்ததோடு அவர் உடனே குணமடைய வேண்டும் என்று வேண்டியுள்ளனர்.
சினிமா துறையினர்; ஆனால் சினிமா துறையினர் பலரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரிக்கவில்லை. சினிமாவில் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூட அவரின் உடல்நிலையை விசாரிக்கவில்லை. ஏன் ஒரு ட்விட் கூட போடவில்லை.
விஜயகாந்திற்கு என்று சில பண்புகள் இருக்கும். அவர் சினிமாவில் பலரை வாழ வைத்துள்ளார். அவர் படத்திற்கு ஷூட்டிங் போனால் கண்டிப்பாக உணவிற்கு பஞ்சம் இருக்காது. அவர் பல ஹீரோக்களுக்கு வாழ்வளித்துள்ளார். இப்போது டாப்பில் இருக்கும் ஒரு ஹீரோவிற்கு கூட அவர்தான் அறிமுக நாட்களில் தொடர் ஆதரவு கொடுத்தது .

பல நடிகைகளுக்கு கூட வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். அதோடு நிற்காமல் தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு தலைவராக விஜயகாந்த் செய்த சாதனைகளை மறக்க முடியாது. அதன் கடனை அடைந்தவர் விஜயகாந்த். டாப் ஹீரோக்கள் எல்லோரையும் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வருவாய் பெற்று கடனை அடைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த போது.. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த விஜயகாந்த நேரடியாக ஏர்போர்ட்டில் இருந்து உயிரை பிடித்துக்கொண்டு ஓடி வந்து அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். அப்படி சக உயிர்களை மதித்த விஜயகாந்த்தின் உடல்நிலையை பற்றி சினிமா உலகில் டாப் நடிகர்கள் விசாரிக்காமல் அமைதியாக இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications