தினகரனின் திடீர் ஆலோசனைக்கு என்ன காரணம்?... பரபர பின்னணி
சென்னை: தினகரனின் திடீர் ஆலோசனைக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான அலசி ஆராயப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கப்பட்டவுடன் அவர் அக்கட்சியை கைப்பற்ற படாத பாடு பட்டு இறுதியில் புதிய அமைப்பை தொடங்கினார். எனினும் அதிமுகவினர் பெரும்பாலானோர் தன் பக்கம் இருப்பதாகவே தினகரன் கூறி வருகிறார்.
இந்நிலையில் ஆர் கே நகரில் அதிமுக, திமுகவை புறந்தள்ளிவிட்டு தான் வெற்றி பெற்றதில் தினகரன் மகிழ்ச்சியில் உள்ளார். இதுவே அவர் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவதற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
[ஓட்டுக்கு ரூ. 6000 கொடுத்தும் ஆர்கே நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியலியே- டிடிவி தினகரன் கிண்டல்]

சாதகம்
இந்த நிலையில் தினகரன் இன்று திடீரென 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் தகுதி நீக்க தீர்ப்பு தமக்கு சாதகமாக வந்தால் என்ன செய்வது, பாதகமாக வந்தால் என்ன செய்வது? இன்றைய தமிழக அரசியல் குறித்தும் பேசப்பட்டது.

ஆலோசனை
அடுத்தக்கட்டமாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன. முதல்வரை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என முந்தைய சந்திப்பில் சசிகலா தினகரனிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை விமர்சிக்கலாமா இல்லாட்டி அடக்கி வாசிக்கலாமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

கூட்டணி
மேலும் அதிமுகவை எப்படியும் கைப்பற்றியே தீருவேன் என கூறும் தினகரன் அதற்கான வியூகங்கள் குறித்தும் அங்குள்ள தமது ஆதரவு எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுப்பது குறித்தும் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கும் மேல் கமல்ஹாசன் தினகரனுடன் கூட்டணி அமைப்பார் என்ற ஒரு பேச்சு இருந்தது.

திமுகவுடன்
கமல்ஹாசனை தங்களுடன் இணைத்து கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. கமல்ஹாசன் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்படுகிறது. ஒரு வேளை அது நடந்தால் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள திமுகவுடன் எப்படி நாம் சேருவது என்பது குறித்தெல்லாம் பேசப்பட்டுள்ளது.

விவாதங்கள்
தினகரனின் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசங்கரி, கட்சி கட்டுப்பாட்டை மீறி திவாகரன் குரூப் கலந்து கொண்ட டிவி விவாதத்தில் கலந்து கொண்டதால் அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே நம் கட்சியில் உள்ளவர்களை திவாகரன் இழுப்பதை எப்படி தடுப்பது என்பதும் குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications