Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. ஏன் இன்னும் சசிகலாவை பார்க்க தினகரன் போகலை!

சிறையில் சசிகலாவை இதுவரை சந்திக்காமல் தவிர்த்து வருகிறாராம் தினகரன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election Results 2019: பரிதாபம்!..ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக- வீடியோ

    சென்னை: ஆ..ஊ..ன்னா பெங்களூருக்கு பறந்து செல்லும் தினகரன், இதுவரை சசிகலாவை சென்று சந்திக்காமலேயே இருக்கிறாராம்! எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்ற கவலையும், அச்சமும் தினகரனை சூழ்ந்துள்ளதே இதற்கு காரணம்!

    தேர்தல் முடிந்த மறுநாளே அமமுக படு சுறுசுறுப்பாக வேலை பார்த்தது என்னவோ உண்மைதான். அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அதன் பொதுச்செயலாளராகவும் மாறினார் டிடிவி தினகரன்!

    சொந்தமாக ஒரு கட்சி என்ற அங்கீகாரம் கூட இல்லாத காரணத்தினால் சின்னம் பிரச்சனை சின்னா பின்னமானதை நன்றாக உணர்ந்ததாலும், சுப்ரீம் வரைபோய் வந்தும் காயங்களை மறக்க முடியவில்லை அதனால்தான் அங்கீகாரம் என்பது முதல் தேவையாக அமமுகவுக்கு இருந்தது!

    உரிமை கோரும் வழக்கு

    உரிமை கோரும் வழக்கு

    இதையடுத்து, அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த உள்ளதாகவும், இதற்காக விரைவில் சிறையில் இருந்து ரிலீஸாக போகிறார் என்றும் தகவல்கள் வந்தன.

    தேடி வருவார்கள்

    தேடி வருவார்கள்

    மேலும் இந்த தேர்தலில் குறைந்தது 5 இடங்களையாவது அமுமக பெறும் என்றும் இந்த நேரத்தில் கட்சியின் அங்கீகாரத்தை உயர்த்தினால், எப்படியும் பிற கட்சிகள் தங்களை தேடி வருவார்கள் என்றும் நம்பப்பட்டது. அதன்படியே அதிமுக தரப்பில் நிறைய நிர்வாகிகள் அதிமுக பக்கமும் சாய தயாராகதான் இருந்தார்கள். (இனியும் அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கவே செய்கிறது)

    தேர்தல் செலவுகள்

    தேர்தல் செலவுகள்

    அதனால் எப்படியும் தினகரன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்றுதான் கணிக்கப்பட்டது. ஆனால் இது எல்லாமே நேற்று சொதப்பல் ஆகிவிட்டது. உண்மையிலேயே, எம்பி தேர்தல் அல்லது சட்டமன்ற இடைத் தேர்தல் ஏதாவது ஒன்றில் டிடிவி கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். இந்த இடத்தில் அதிமுக கொஞ்சம் உஷாராகவே வேலை பார்த்து 9 இடங்களை கைப்பற்றி விட்டது. ஆனால் தினகரனோ, வைட்டமின் "ப"வை உள்ளே இறக்காமல் போனதுடன், வேட்பாளர்களை நம்பியே தேர்தல் செலவுகளை கணக்கு போட்டுவிட்டு, கோட்டை விட்டுவிட்டார்!

    தகுதி நீக்க எம்எல்ஏக்கள்

    தகுதி நீக்க எம்எல்ஏக்கள்

    எடுத்ததுக்கெல்லாம் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திப்பவர் இதுவரை சந்திக்காமல் உள்ளார். கட்சியின் நெருக்கடி நேரத்தில், மிக முக்கிய முடிவுகளை எடுக்க தினகரன் நாடி செல்வது சசிகலாவைதான். நம்மை நம்பி உள்ள 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களை கைவிட்டு விடக்கூடாது என்பது முதல் அனைத்தையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தந்தது சசிகலாதான்.

    அப்செட்டில் சசிகலா

    அப்செட்டில் சசிகலா

    ஆனால் தேர்தல் முடிவுகளால் இன்னும் பெங்களூர் பக்கம் செல்லாமல் உள்ளார். நேற்றைய ரிசல்ட்களை பார்த்த சசிகலாவே போனில் தொடர்புகொண்டு பெங்களூருக்கு தினகரனை கூப்பிட்டாராம். ஆனால் தினகரன் இன்னும் அதை பற்றி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். சசிகலாவின் அழைப்புக்கும் உடனடி பதிலை சொல்ல முடியாத நிலையில் உள்ளாராம். இது ஏற்கனவே அப்செட்டில் இருந்த சசிகலாவுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    மாற்றங்கள்

    மாற்றங்கள்

    தான் இல்லாத இடத்தில் கட்சிப்பொறுப்பில் தினகரனை அதிகமாக நம்பி விட்டு சென்றார் சசிகலா. இப்போது இந்த தேர்தல் முடிவுகளால், அமமுகவில் நிறைய மாற்றங்கள் இனி சசிகலா மூலமாகவே அதிரடியாக நடக்கும் என்று நம்பப்படுகிறது!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+