சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்!
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தமிழக வெற்றிக் கழகம் தனக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சியாக தவெக எளிதாக வெற்றிபெறக்கூடிய ஒரு இடத்தை கூட்டணி கட்சிக்கு வழங்கியிருப்பது வெறும் அரசியல் நாகரிகம்m மட்டும் இல்லை எனவும், அதற்குப் பின்னால் டெல்லியை நோக்கிய நீண்டகால அரசியல் திட்டம் உள்ளது என்கின்றனர் தவெகவினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் இருந்தபோதே, குறைந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் பெற்றது.
பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறியது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைக்க தேவையான ஆதரவை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடமிருந்து பெற்றது.

காங்கிரஸ்
அதன்பிறகு அமைச்சரவையிலும் காங்கிரஸுக்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட்டன. சுமார் ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சி.வி. சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவை எண்ணிக்கை அடிப்படையில், தவெக ஆதரவு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான சூழல் இருந்தது.
மாநிலங்களவை
எனவே, மாநிலங்களவையில் தனது கணக்கைத் தொடங்க தவெக இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன் மூலம் கடந்த சில மாதங்களிலேயே இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும், இரண்டு அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்த முடிவுக்கு பின்னால் தவெகவுக்கு முக்கிய திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
2029 மக்களவை தேர்தல்
குறிப்பாக 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்தே தவெக செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஒரு முக்கிய சக்தியாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்காக டெல்லி அரசியலில் வலுவான தொடர்புகள் தேவைப்படும் சூழல் உள்ளது. தேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தவெக தலைமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக
இதற்காகவே காங்கிரஸுடன் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் நிலவியதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டதன் மூலம், டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக இதை சிலர் பார்க்கின்றனர். மறுபுறம், மாநிலங்களவைக்கு தவெக சார்பில் சமூக பிரதிநிதித்துவம் கொண்ட தலைவர்களை அனுப்பலாம் என்ற கருத்தும் கட்சிக்குள் எழுந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்
இருப்பினும் கூட்டணி அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் காங்கிரஸுக்கு சீட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது மாநிலங்களவையில் உள்ள சில காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2028-ல் முடிவடைகிறது. அப்போது தமிழக அரசியல் நிலைமை மற்றும் சட்டப்பேரவை பலத்தைப் பொறுத்து, தவெக சார்பில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
டெல்லி அரசியல்
அதன் மூலம் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தில் வலுவான இருப்பை உருவாக்க முடியும் என தவெக கணக்கிடுகிறது. இதனால், தற்போதைய ஒரு மாநிலங்களவை இடத்தை விட்டுக் கொடுத்தாலும், எதிர்கால அரசியல் கணக்கை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவு எதிர்காலத்தில் தவெகவுக்கு பலன் அளிக்குமா அல்லது காங்கிரஸுக்கே அதிக நன்மை தருமா என்பது போக போக தான் தெரியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!














Click it and Unblock the Notifications