கொள்கை அதேதான்.. ஆனால்.. தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு திராவிட கட்சி கிடையாது? ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் நேற்று தனது கொள்கைகளை அறிவித்தது. தமிழ்நாட்டில் மீண்டும்.. இன்னொரு சமூக நீதி.. மதச்சார்பின்மை.. கொள்கை கொண்ட கட்சி உருவாகி உள்ளது. மதம், மொழி , சாதி, இனம் ஆகியவை மூலம் பாகுபடுத்தப்படாத கொள்கையான சமூக நீதி.. மதச்சார்பின்மை கொள்கை தமிழ்நாட்டில் பல கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக இந்த கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. அதிமுகவும் இந்த கொள்கையை கொண்டே உருவாக்கப்பட்டது. விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதே கொள்கையுடன் உருவாக்கப்பட்டது. பாஜகவின் வலதுசாரி கொள்கைக்கு எதிராக இந்த கொள்கைகள் அமைந்து உள்ளன.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இப்படிப்பட்ட நிலையில் அதே கொள்கையுடன் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி உள்ளது. அதன்படி திருவள்ளுவர், அம்பேத்கார், பெரியார், காமராஜர், வேலுநாசத்தியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை வரிகளாக எழுதப்பட்டு காட்சிகளாக திரையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நெல்சன் சேவியர் செய்துள்ள போஸ்டில்,

தமிழக வெற்றிக் கழகம் ஏன் திராவிடக் கட்சி இல்லை ?

திராவிட இயக்க மேடைகள் குப்பனையும் சுப்பனையும் எப்படி அரசியல்படுத்தி அங்கீகரித்தன என்பது ஒரு நூற்றாண்டு வரலாறு.

தெருமுனைக் கூட்டம் தொடங்கி மாநில மாநாடு வரை ஒரு மேடை என்பது மக்களோடு எளிய முறையில பேச முயல்கிற ஒரு கட்சியின் முதன்மையான அரசியல் கருவி.

சுவர் விளம்பரம், ப்ளக்ஸ் பேனர்கள், கட்சி நோட்டீஸ், என அதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பெரும் உழைப்பு கூட்டு முயற்சி தேவைப்படும். தாம் கொண்ட கொள்கைக்காக அந்த உழைப்பை அர்ப்பணிக்கும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அந்தப் பகுதியின் மேடையில் அவர்தம் பெயர்சொல்லி அறிமுகப்படுத்தி சால்வை அணிவித்நு அங்கீகரிப்பது ஒரூ கூட்டு செயல்பாடு.

கட்சி என்னும் அதிகார கட்டமைப்பின் கடைசி அலகு (Unit) உள்ளூர் நிர்வாகிகள். வாக்காளர்களின் பிரச்னைகளை பற்றி மக்கள் மொழியில், பேச அவர்களோடு பயணிக்க அந்த அங்கீகாரம் மிக மிக முக்கியம்.

மேடையில் இருக்கும் சிறப்பு விருந்தினர்களை அவர்களே, அவர்களே என சொல்லி இழுத்துக் கொண்டே இருந்தால் எப்போது நான் பேசி முடிப்பது என துக்ளக் வார இதழ் ஆண்டு நிகழ்வு ஒன்றில் சோ ராமசாமி நக்கலாக பேசியிருப்பார்.

விஜயும் இன்று அதையே பேசினார். சோ ராமசாமியின் அரசியல் பார்வையிலேயே அணுகினார். அவர்களே அவர்களே என நக்கலடித்த அவருடைய பேச்சின் அந்த பகுதியைத் தவிர தலைமைக் கழக நிர்வாகிகளின் உழைப்பை எங்கேயும் அங்கீகரிக்கவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையோ, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பெயரைக் கூட விஜய் உச்சரிக்கவில்லை என்பது எதிர்பார்த்த அதிர்ச்சி.

தங்கள் திரைபுகழ் வெளிச்சத்தை கலைஞரும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எவ்வளவு இயல்பாக தங்கள் கட்சி நிர்வாகிகளோடு பகிர்ந்து கொண்டார்கள் என்பது அரசியல் வரலாறு.

திருச்சி மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கேஎன் நேருவை திமுக தலைவர் ஸ்டாலின் மேடையில் அங்கீகரித்து பேசியிருந்தது சமீபத்திய உதாரணம்.

போகுமிடமெல்லாம் உங்கள் கட்சி நிர்வாகிகளின் பெயரை உரக்க சொல்லுங்கள் விஜய் . நீங்கள் உச்சரிக்கும்போது அந்த தொண்டர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அங்கீகரிக்கப்படுகிறார். அப்படித்தான் அண்ணா திமுகவை கட்டியமைத்தார். கலைஞர் அதை செம்மைப்படுத்தினார்

கொள்கை என்பது Printed Sheetல் மட்டும் இருப்பதல்ல. Proper Execution ல் இருப்பது, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+