சென்னை டூ புனே.. ரயில் நிலையத்தில் ஐடி இன்ஜினியர் சுற்றிவளைப்பு.. லேப்டாப்பில் இருந்த அல்கொய்தா
சென்னை: ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு சென்றுள்ளார். அவரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜூபைர் ஹங்கர்கேகர் புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட 'அல்கொய்தா' பயங்கரவாத அமைப்பின் ஆவணங்களை வைத்திருந்ததாக எழுந்த புகாரில் கைதாகி உள்ளார்.
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட 'அல்கொய்தா' பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பினர் ஆன்லைன் மூலம் மகாராஷ்டிராவில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அம்மாநில மாநில பயங்கரவாத தடுப்பு படையினருக்கு சிலரை பற்றி ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் புனேயில் பல இடங்களில் கடந்த 9-ந்தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் புனே கோந்துவா பகுதியில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் வீட்டில் 19 லேப்-டாப்கள் மற்றும் 40 செல்போன்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஜூபைர் ஹங்கர்கேகர் அல்கொய்தா தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து இருந்ததும், அந்த அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இந்தநிலையில்: ஜூபைர் ஹங்கர்கேகர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ரெயில் மூலம் புனே செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் புனே சென்றுள்ளார். இந்நிலையில் புனே ரயில் நிலையத்தில் ஜூபைர் ஹங்கர் கேகரை அம்மாநில மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். உடன் வந்த அவரது நண்பரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
ஜூபைர் ஹங்கர்கேகர் ஒருமாத கண்காணிப்புக்கு பிறகே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூபைர் ஹங்கர்கேகரின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் ஆகும். அவர் புனேயில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி, கோந்துவா பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்2019 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அல்-கொய்தா உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், புனேவில் உள்ள சில பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்களுடன் (குறிப்பாக அல்-ஷபாப் மற்றும் பிற குழுக்களுடன்) தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications