சவுமியா அன்புமணிக்கு வந்த ஆசை.. தருமபுரியில் கடைசி நொடி.. எல்லாத்துக்கும் காரணம் பாஜக? சபாஷ் சௌமியா
சென்னை: பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார்.. அதுவும் வேட்பாளர் பெயர் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். என்ன காரணம்?
டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா.. குறிப்பாக, பசுமைதாயகம் பெயரில் பல்வேறு விழிப்புணர்வினை வருடந்தவறாமல் ஏற்படுத்தி வருகிறார்.. "ரமணா" படத்தில் விஜயகாந்த் பேசுவாரே, அதேபோல, புள்ளிவிவரங்களுடன் கூடிய முக்கிய தரவுகளை தன்னுடைய விழிப்புணர்வு பேச்சுக்களில் வெளிப்படுத்தி அசரடித்து விடுவார் சௌவுமியா..

பெண் பிள்ளைகள்: மேலும் பெண் பிள்ளைகளுக்கான உத்வேகம் தரக்கூடிய வகையில், வீர்யம் மிக்க பேச்சுக்களை அவர்களுக்கு வழங்கி வருபவர்.. இவரது மோடிவேஷனல் பேச்சுக்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உண்டு..
அதேசமயம், தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பவர்.. ஆனாலும், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், சௌமியாவுக்கும் சீட் தரப்படப்போவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் பரபரக்கும்.. அதே பரபரப்புடன் வந்தவேகத்தில் காணாமலும் போகும். அரசியலில் முழுமையாக ஈடுபடாவிட்டாலும், எந்நேரமும் சௌமியா அன்புமணியின் கருத்தாழம் மிக்க பேச்சுக்கள் இணையத்தில் அவ்வப்போது வலம்வந்து கொண்டேயிருக்கும்.
சௌமியா : இப்போது நிஜமாகவே சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிட போகிறார்.. நேற்றைய தினம் பாமக தரப்பில் முதலில் வெளியான வேட்பாளர் லிஸ்ட்டில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு, அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்...
சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.. ஆனாலும், முதல்முறையிலேயே லேசான குழப்பம் ஏற்பட்டுவிட்டது.. வேட்பாளர் பெயரை மாற்ற என்ன காரணம்? சவுமியா பெயரை கடைசியாக அறிவிக்க என்ன காரணம்? என்ன நடந்தது? சவுமியா ஏன் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார்? என்ற பல்வேறு சந்தேகங்களும், ஆர்வமும் இணையத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றன.
என்ன காரணம்: ஆனால், சவுமியா தேர்தலில் களமிறங்க முக்கிய காரணம் சொல்லப்படுகிறது.. முதலில் இதற்கெல்லாம் பதிலாக சில காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.
அதாவது, சவுமியாவின் அப்பா கிருஷ்ணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார்.. எம்.பி.யாகவும் இருந்தவர்... சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பியாக இருப்பவர்... அதனால், சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்..
சூழல்கள்: அதேபோல, புகுந்த வீடும் அரசியல் தலைவர்களின் வீடுதான்.. மாமனார் டாக்டர் ராமதாஸ் பாமக நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போதைய பாமக தலைவராகவும் பதவி வகிப்பவர்.
இப்படியான அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருப்பதால்தான், சவுமியாவும் தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டாராம். தன்னுடைய ஆசையை அன்புமணியிடம் வெளிப்படுத்தவும், அவரும் இதற்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
திடீர் மாற்றம்: சவுமியா தேர்தலில் களமிறங்க இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. முதலில் அதிமுகவுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராக இருந்தாலும்.. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணி மாறியதால் சவுமியா போட்டியிட தயங்கினாராம்..
ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர்பார்த்தது போலவே, சவுமியாவே போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு, சவுமியாவை வேட்பாளராக அறிவித்ததாகவும் சொல்கிறார்கள்.
தருமபுரி தொகுதி: சவுமியா தேர்தலில் களமிறங்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, அன்புமணியைவிட சௌமியா, அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர்.. மக்களிடம் இறங்கி சென்று பேசக்கூடியவர்.. எளிதாக பழகக்கூடியவர்.. அதனால், தர்மபுரி தொகுதியில் சௌமியாவையே வேட்பாளராக களமிறக்கினால், பாமகவுக்கு பெருத்த பலத்தை பெற்றுத்தருவதுடன், பெண்கள் மத்தியில் புதிய தெம்பு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறதாம்.
சவுமியா தேர்தலில் களமிறங்க வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. சௌமியாவை தேர்தலில் போட்டியிட சொன்னதே பாஜகதானாம்.. அதாவது, பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுமே தற்போது களமிறங்குவால், பாமகவின் அன்புமணியும் தர்மபுரியில் போட்டியிட பாஜக சொன்னதாம். ஆனால் அன்புமணி, தற்போது ராஜ்யசபா எம்பியாக இருப்பதால், மறுபடியும் எம்பி தொகுதிக்கு போட்டியிடுவது சரியாக இருக்காது என்றாராம்.
அழுத்தம்: அதற்கு பாஜக தரப்பிலோ, "எல்.முருகன்கூட, இணை அமைச்சராக இருந்து, இப்போது நீலகிரியில் போட்டியிடுகிறாரே" என்று சொன்னதாம்..
எனினும் அன்புமணி, தான் போட்டியிடுவதை தவிர்த்ததுடன், ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு பதிலாக சௌமியாவை வேட்பாளராக அறிவிக்கும்படி செய்தாராம். பாஜகவின் அழுத்தத்தினால் இந்த வேட்பாளர் மாற்றம் நடந்திருந்தாலும், பாமகவுக்கு இதனால் சாதகமான முடிவுகளே கிடைக்கும் என்கிறார்கள்.
எகிறும் எதிர்பார்ப்பு: எப்படியோ, ஏற்கனவே பெண்களின் ஆதரவை வெகுவாக பெற்றிருக்கும் சௌமியா, இந்த முறை நேரடி அரசியலில், அதுவும் முதல்முறையாக களமிறங்குவதால், தர்மபுரி தொகுதியில் எதிர்பார்ப்பு எகிறுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications