சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன்?
சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகளும் சென்னை நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறுநும் இரண்ட்ம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் அமைக்கும் பணி சென்னை முழுவதும் தொடங்கி உள்ளது.
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் திநகர் உள்பட முக்கியமான பல்வேறு ரயில் நிலையங்கள் வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் தியாகராயநகர் நடேசன் பூங்கா மெட்ரோரயில் நிலையம் அமைப்பது கைவிடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்கா, நடேசன் பூங்கா, நந்தனம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில்,நடேசன் பூங்காவில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, "நந்தனம் மெட்ரோ ரயில்வே ஸ்டேசனில் இருந்து நடேசன் பூங்கா ரயில் நிலையம் 625 மீ.தொலைவில் அமைகிறது. மறுபுறம், நடேசன் பூங்கா, பனகல் பார்க் ரயில்நிலையம் 623 மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே 700 மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரமாக இருப்பதால் நடேசன் பூங்கா ரயில்நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications