தவெக போராட்டம்! கூட்டம் எதிர்பார்த்த மாதிரி இல்லையே! விஜய் டக்குன்னு பேச்சை முடித்தது ஏன்? என்னாச்சு
சென்னை: நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக போராட்டம் 2 விதமான விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த போராட்டம் மிகப்பெரிய திட்டத்துடன், எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது. ஆனால் அதன்பின் நடந்ததுதான் பல விவாதங்களை எழுப்பி உள்ளது.
போலீஸ் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று மேடை ஏற்றினர். தவெக பேரணியில் இவர்கள் மேடை ஏற்றப்பட்டதோடு.. பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டது. கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மேடை ஏற்றப்பட்டனர்.

எதிர்பார்ப்பு என்ன?
இந்த மாநாட்டிற்கு முன் பின்வரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.
1. மாநாட்டிற்கு குறைந்தது 20 ஆயிரத்திற்கு மேல் வருவார்கள். மெரினா சாலை.. அதாவது சிவானந்தா சாலை மொத்தமாக ஸ்தம்பிக்கும்.
2. விஜய் இந்த மாநாட்டில் கடுமையாக பேசுவார், அரசை எதிர்த்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3. விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேடை ஏற்றுவார். அவர்கள் தங்கள் கண்ணீர் கதைகளை நீண்ட நேரம் பேசுவார்கள். இது அரசுக்கு பெரிய நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடந்தது என்ன?
1. நேற்று கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் கூட வரவில்லை.
2. வந்த கூட்டம் கூட போதிய தண்ணீர் இல்லாமல் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.
3. விஜய் முதல்வரை விமர்சனம் செய்தார். ஆனால் இரண்டரை நிமிடங்கள்தான் பேசினார். பெரிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிடவில்லை. சாரி கேட்பதை விமர்சனம் செய்யும் போர்டை கையில் வைத்துக்கொண்டு.. சாரி கேளுங்கள் என்று விஜயே பேசும் அளவிற்குத்தான் திட்டமிடல் இருந்தது.
4. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மேடை ஏற்றப்பட்டாலும் அவர்கள் முழுமையாக பேச விடப்படவில்லை. பின்னர் அவர்கள் ஏன் மேடை ஏற்றப்பட்டார்கள் என்பதே பெரிய கேள்வி.
5. விஜய் பேசிய பின் சிறிய பேரணியாவது செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்த வேகத்தில் விஜய் சென்றுவிட்டார்.
விஜய் தரப்பு சொல்லும் காரணம்
ஆங்காங்கே போலீசார் நிறுத்தியதால் போதிய கூட்டம் வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பு கூறுகிறார்கள். ஆனால் அப்படி நிறுத்தப்பட்டவர்கள் எல்லாம் வேறு மாவட்ட ஆட்கள் மட்டுமே. சென்னைக்கு உள்ளே யாரும் நிறுத்தப்படவில்லை. அப்படி இருந்தும் கூட சென்னைக்கு உள்ளே 5 ஆயிரம் பேரை கூட திரட்ட முடியாமல் போனது வியப்பை ஏற்படுத்துகிறது.
அதிலும் விஜய் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்டுப்படுத்த முடியாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட விஜயை ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட பார்க்க போதிய ஆட்கள் வராமல் போனது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் போலீஸ் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று மேடை ஏற்றினர். தவெக பேரணியில் இவர்கள் மேடை ஏற்றப்பட்டதோடு.. பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டது. 24 குடும்பங்களின் பெயர்களை விஜய் வெளியிட்டு உள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக இந்த வாய்ப்பை தவறவிட்டது. அதோடு 14 வருடமாக கட்சி நடத்தும் நாம் தமிழர் கட்சி இதே விவகாரத்தில் போராட்டங்களை நடத்தவில்லை. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இதே விவகாரத்தை கையில் எடுத்ததோடு இல்லாமல் - பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேடை ஏற்றி உள்ளனர். ஆனால் இவர்களை பேச போதிய நேரம் கொடுக்காமல் போராட்டத்தையே சட்டென முடித்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி











Click it and Unblock the Notifications