“41 பேரின் உயிர் போயிடுச்சு.. விஜய்யை கைது செய்யாதது ஏன்?” தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விஜய்யை பார்க்க வந்ததால்தான் 41 பேரின் உயிர் போயிருக்கிறது. விபத்துக்கள் நடந்தால் உரிமையாளர்களை கைது செய்வது வழக்கம்தானே! ஏன் விஜய்யை கைது செய்யவில்லை?" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 27ம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

T Velmurugan Vijay Tamil Nadu

இந்த நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

அதாவது அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் என இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் அவர் பிரச்சாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் காலை 8.45க்குதான் சென்னை நீலாங்கரை வீட்டிலிருந்தே விஜய் புறப்பட்டார். இந்த கால தாமதம், அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து. கரூரில் மதியம் 12 மணிக்கு வருவார் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சுமார் 6-7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்தார்.

இதனால் குடிநீர், உணவு இல்லாமல் நீண்ட நேரமாக வெயிலில் நின்றுக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் சோர்வடைந்தது. இதனையடுத்து மாலை விஜய் கரூர் வந்தபோது அவரை பார்க்க கூட்டம் முந்தியடித்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது. மறுபுறம் அரசு கட்டிடங்கள், மரங்கள், விளக்கு கம்பங்கள் உள்ளிட்டவற்றின் மீது ஏற வேண்டாம் என்று தொண்டர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் அதை தொண்டர்கள் பின்பற்றவில்லை. எனவே இந்த விஜய்யை பார்க்க வந்திருந்த தொண்டர்கள் பலர், பொது சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தனர்.

ஒரு கட்டத்தில், கூட்டம் மிகுந்த சோர்வுடன் இருந்தது. மறுபுறம் விஜய்யை இன்னும் நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்று கூட்டம் முந்திக்கொண்டு முன்னேற, சிலர் தடுமாறி கீழே விழுந்திருக்கின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். விஜய் பேசி முடித்து சென்ற பின்னர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். விஜய் கரூரிலிருந்து கிளம்பி திருச்சி விமான நிலையம் வந்தபோது உயிரிழப்பு 30ஆக இருந்தது. பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக விளக்கம் கேட்டபோது விஜய் பதிலளிக்கவில்லை. அவர் சென்னைக்கு வந்து, வீடு சேர்ந்த பின்னர், 'மனம் கணக்கிறது' என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு விஜய் முழு பொறுப்பேற்க வேண்டும், நேர தாமதமும், அதை முன்கூட்டியே தெரிவிக்காதமும்தான் இந்த விபத்துக்கு காரணம் என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என வேல்முருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். "விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதை நானும் வரவேற்கிறேன். விஜய்யை பார்க்க வந்தால்தான் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரை விட்டிருக்கிறார்கள். பொதுவாக விபத்துக்கள் நடந்தால் உரிமையாளர்களை தமிழக அரசு கைது செய்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது விஜய் வீட்டிலும் அலுவலகத்திலும் வழக்கம் போல கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. வெளிநாட்டிலிருந்து ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா? ராகுல் காந்தி குறித்த செய்தி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+