கிரைண்டரில் கணவரை அரைத்த மனைவி.. காட்டி தந்த பச்சை குத்தப்பட்ட பெயர்.. அப்படியே "ப்ளூ டிரம்" சம்பவம்
சென்னை: தன்னுடைய கணவனை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துள்ளார் மனைவி.. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் நேற்று முதல் பொதுமக்களை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது.. இந்த பயங்கர சம்பவமானது, "மீரட் ப்ளூ டிரம்" சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்?
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் 36 வயது ராகுல்.. இவரது 28 வயது மனைவி ரூபி.. 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.. இந்த தம்பதிக்கு 12 வயது மகன், 10 வயது மகள் உள்ளனர்.

ரூபியின் கள்ளக்காதல்
இந்நிலையில், ரூபிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவன் இல்லாத நேரங்களில் காதலனை வீட்டுக்கு வரவழைத்து ரூபி ஜாலியாக இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த விவகாரம் ராகுலுக்கு தெரியவந்தது. இதனால் மனைவியை கண்காணிக்க துவங்கினார்.
இதற்காக, வேலைக்கு போவதாக ரூபியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார் ராகுல்.. வழக்கம்போல் ரூபியும், தன்னுடைய காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.. அந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த ராகுல், கள்ளக்காதல் ஜோடியை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.. பிறகு இருவரையும் கடுமையாக கண்டித்தார்..

துண்டு துண்டாக வெட்டினார்
ஆனாலும் ரூபி எதையுமே கண்டுகொள்ளவில்லை.. இதனால் ராகுல் மனைவியை தொடர்ந்து கண்டித்து, அறிவுரை சொல்லி வந்தார்.. இது ரூபிக்கு கடும் எரிச்சலை தரவும், கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்..
சம்பவத்தன்று காதலன், அவரது நண்பர்களின் உதவியுடன் ராகுலை கொன்றார் ரூபி.. கொலையை மறைப்பதற்காக, கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டினார்.. பிறகு உடலின் சில பாகங்களை கிரைண்டர், மிக்ஸியில் அரைத்துள்ளார்.. மேலும் சில பாகங்களை பாலித்தீன் பைகளில் கட்டி, வேறு வேறு பகுதிகளில் வீசி எறிந்துவிட்டார்.
இதனிடையே, ராகுல் காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரி, போலீசுக்கு அழுதுகொண்டே ஓடினார் ரூபி.. இவர் தந்த புகாரின் அடிப்படையில் விசாரணையும் மேற்கொண்டு, மாயமான ராகுலை போலீசார் தேடி வந்தனர்..
பச்சை குத்தப்பட்ட ராகுல் பெயர்
அந்த நேரத்தில்தான் ரூபியின் நடவடிக்கையில் வித்தியாசம் இருப்பதை கண்டு, அவரை விசாரணைக்குட்படுத்தினார்கள்.. அப்போது ராகுலை கொலை செய்ததை ரூபி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியுடன், இந்த கொலைக்கு உதவியர்களையும் போலீசார் கைது செய்தனர்..
ஆனால், இந்த கொலையில் போலீசாருக்கு போதுமான துப்பு கிடைக்கவில்லை.. சடலத்தை மீட்பதும், அடையாளம் காண்பதும் மிகப்பெரிய சவாலாக அமைந்தது..
போஸ்ட் மார்ட்டம்
27 நாட்களுக்கு பிறகு அதாவது டிசம்பர் 15ம் தேதியன்று, ஒரு வடிகாலில் பாலிதீனில் சுற்றப்பட்ட பாதி சிதைந்த உடலை போலீசார் மீட்டனர்.. உடனடியாக போஸ்ட் மார்ட்டத்துக்கு அந்த உடலை அனுப்பி வைத்தனர்.. மீட்கப்பட்ட கையில் "ராகுல்" என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்ததை கொண்டு, அவர் யார் என அடையாளம் காணப்பட்டது. அப்போதுதான் ரூபியின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது...
உடனடியாக ராகுலின் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.. அக்கம்பக்கத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து இரும்புக் கம்பி, மரப்பலகை, ஒரு ஹீட்டரில் உலர்ந்த ரத்தக் கறைகள் இருப்பது தெரியவந்தது.
கிரைண்டரில் கணவன்
ரூபியின் தகாத உறவு குறித்து அக்கம்பக்கத்தினரும் போலீசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுபோக வீட்டிற்கு இரண்டு பேர் அடிக்கடி வந்து செல்வதாக ராகுலின் மகளும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இரும்பு கம்பி, ஆணி பதித்த சுத்தியலால் ராகுலை தாக்கினார்களாம் இந்த கள்ளக்காதல் ஜோடி.. இதில், ராகுல் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாராம்.. இதற்கு பிறகே அவரது கை, கால்கள், தலையை தனியாக துண்டித்ததாகவும், அவற்றை கிரைண்டரில் போட்டு மிகவும் கொடூரமாக சிதைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். .
மிச்ச உடல் பாகங்களை பாலிதீன் பைகளில் அடைத்து பல்வேறு பகுதிகளில் வீச அபிஷேக் என்ற நண்பர் உதவியதாகவும் கள்ளக்காதல் ஜோடி போலீசில் தெரிவித்துள்ளது.
இப்போது கைதான 3 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. தலை கிடைக்காத நிலையில் கொல்லப்பட்டவரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்த நிலையில், கையில் குத்தப்பட்டிருந்த பச்சை, ராகுலின் 2 பிள்ளைகளும் அளித்த தகவலின் பேரில் உண்மையான குற்றவாளிகள் கைதாகி உள்ளார்கள்.
ப்ளூ டிரம் சம்பவம் நினைவிருக்கா?
இந்த கொலை சம்பவம், சம்பால் பகுதியில் நடந்த Blue Drum சம்பவம் போலவே உள்ளதாக அச்சப்பட்டு அம்மக்கள் சொல்கிறார்கள்.. சில மாதங்களுக்கு முன்பு சம்பால் பகுதியில் என்ன நடந்தது தெரியுமா?
கள்ளக்காதல் விஷயம் கணவன் ராஜ்புத் என்பவருக்கு தெரிந்துவிட்டதால், மனைவி முஸ்கானும், கள்ளக்காதலனும் எரிச்சலடைந்தார்கள்.. இதற்காக ராஜ்புத்துக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து தந்தார் மனைவி முஸ்கான்.. பிறகு கள்ளக்காதலர்கள் இருவரும் ராஜ்புத்தை ஆயுதங்களால் கொன்றனர்.. கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டினார்.
சிமெண்ட் கலவை
கள்ளக்காதலன் கத்தியால் ராஜ்புத்தின் இதயத்தை குத்தியதும், மனைவி அவரது தொண்டையை அறுத்துள்ளார்.. கைகளை தனியாக வெட்டியிருக்கிறார்கள். வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீட்டில் இருந்த ப்ளூ டிரம்மில் போட்டு, பிறகு சிமெண்ட் கலவையை கொட்டி, உடல் பாகங்களை டிரம்மில் போட்டு மூடிவிட்டார்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்த ராஜ்புத்தை காணோமே? என்று அக்கம்பத்தினருக்கு சந்தேகம் வந்து போலீசுக்கு போனதையடுத்து, வசமாக சிக்கினார்கள் கள்ளக்காதல் ஜோடி.
இப்போது அதே உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு பயங்கரம் நடந்துள்ளது, அம்மாநில மக்களை உலுக்கி எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications