லாரி டிரைவர் மனைவி செய்த பச்சை துரோகம்.. வாசலில் கணவரை வரவேற்று காரில் ஏற்றி.. சொன்னா நம்ப மாட்டீங்க
சென்னை: தாய் செய்த ஒரு தவறால், அந்த குடும்பமே இன்று சிதைந்து போயுள்ளது.. உலகமறியா 3 பச்சிளம் குழந்தைகளும், தாய், தந்தையை காணாமல் துடித்து கொண்டிருக்கின்றன.. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் துரித விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
தெலுங்கானா மாநிலம், பெத்தரவிடு அருகே டோர்னாலினா கிராமத்தில் வசித்து வருகிறார் லாலு ஸ்ரீனு.. 38 வயதாகிறது.. இவர் ஒரு லாரி டிரைவர்.. திருமணமாகி ஜான்சி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்..

லாரி டிரைவர் கணவர்
குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்த வந்தபோதும், லாரி டிரைவரான லாலு ஸ்ரீனுவுக்கு மதுப்பழக்கம் உள்ளது.. கஞ்சா பழக்கமும் உள்ளது.. இந்த இரண்டிற்குமே அடிமையாகி கிடந்தார்.. சில வருடங்களுக்கு முன்பு அவர் கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாரால் கைதும் செய்யப்பட்டு,ஓங்கோல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கணவர் ஜெயிலுக்கு போய்விட்டதால், அவரது மனைவி ஜான்சி, சூரிய நாராயணா என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். ஜான்சியின் தம்பியின் நண்பர்தான் இந்த கள்ளக்காதலன் சூரிய நாராயணா.
ஆனால் இந்த கள்ளக்காதல் விஷயம், ஜெயிலில் உள்ள கணவருக்கு தெரிந்து ஆவேசமானார்.. "நான் வெளியே வந்தால் உங்களை கொல்லுவேன்" என்று லாலு ஸ்ரீனு ஜெயிலில் கர்ஜித்தபடியே இருந்தார்..
வாசலில் வரவேற்ற மனைவி
இதைக்கேள்விப்பட்ட ஜான்சி நடுநடுங்கி போனார்.. கணவர் ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி வெளியே வருவதற்கு முன்பேயே அவரை கொலை செய்வது என முடிவெடுத்தார்.. இதற்காக, குண்டூரைச் சேர்ந்த 4 பேரைக் கொண்டு கூலிப்படையினரை அணுகினார்.. அவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதியும் தந்து, முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்தார் ஜான்சி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லாலு ஸ்ரீனு ஜாமீனில் வெளியே வந்தார். தனது தம்பியுடன் சேர்ந்து ஜெயில் வாசலில் காத்திருந்து கணவரை காரில் அழைத்துச் சென்றார் ஜான்சி..., இந்த காருக்கு பின்னாடியே, கள்ளக்காதலன் சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர்கள் பின்தொடர்ந்து வந்தனர். சிமகுத்தி மற்றும் பொடிலி இடங்களில் லாலு ஸ்ரீனுவை கொல்ல முயற்சி நடந்திருந்தாலும், திட்டம் வெற்றியடையவில்லை.
கண்ணில் மிளகாய் பொடி
பிறகு, சிறுநீர் கழிப்பதற்காக லாலு ஸ்ரீனு, காரை நிறுத்திவிட்டு சென்றார்.. அந்த சந்தர்ப்பத்தில், ஜான்சி பின்னாடியே சென்று கணவரின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவினார்.. உடனே கூலிப்படையினர்கள் குண்டுக்கட்டாக லாலுவை காரில் தூக்கிப்போட்டனர்.. அப்போது ஜான்சி தனது தம்பியுடன் சேர்ந்து கத்தியை எடுத்து லாலுவின் வயிற்றில் குத்தி கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே ரத்தத்தில் மூழ்கி, லாலு ஸ்ரீனு பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே கள்ளக்காதலனும், கூலிப்படையினரும், "நீங்கள் போலீசில் சரணடைந்து விடுங்கள். ஜாமீனில் நாங்கள் உங்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்துவிடுகிறோம்" என்றனர்.. அதன்படியே, ஜான்சியும், அவரது தம்பியும் போலீசில் சரணடைந்தனர்...
3 குழந்தைகளும் பரிதாபம்
அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான், ஜான்சியின் கொலை பிளான் போலீசாருக்கு தெரியவந்தது.. விசாரணையில் கள்ளக்காதலன் சத்திய நாராயணா மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
சினிமாவையே மிஞ்சி நடந்துள்ள இந்த கொலை திட்டம், தெலுங்கானா மாநில மக்களை பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை செய்து தப்பியோடிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்... தாய், தகப்பனை காணாமல் ஜான்சியின் 3 பிள்ளைகளும் இன்று கதறி கொண்டிருக்கின்றன...!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications