தங்கச்சியை சக்களத்தி ஆக்கிய மனைவி.. குவாலியர் கோர்ட்டில் காட்டிய அந்த ஒரு போட்டோ.. ஆடிப்போன கணவர்!
சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், சுமார் 28 ஆண்டுகாலத் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள ஒரு பெண் கையாண்ட விபரீத ஐடியா, ஒட்டுமொத்த நீதித்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவாகரத்து பெறுவதற்காக தன்னுடைய கணவனின் உடன்பிறந்த சகோதரியையே, அவரின் இரண்டாவது மனைவி என்று நீதிமன்றத்தில் பொய் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.. என்ன நடந்தது?
பாதிக்கப்பட்ட நபருக்கும், அந்தப் பெண்ணுக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார்.

தனது பணி நிமித்தமாக அவர் இந்தியா முழுவதும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்த நீண்ட இடைவெளி தம்பதியிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, கடந்த 2015ம் ஆண்டு முதல் அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
போட்டோ ஆதாரம்
சுமார் 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற அந்தப் பெண் திட்டமிட்டார். இதற்காக 2021ம் ஆண்டு குவாலியர் குடும்ப நீதிமன்றத்தில் அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், "என்னுடைய கணவர் தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்டார். அதனால் அவருடன் இணைந்து வாழ முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். விவாகரத்து கோரியதுடன் நில்லாமல், தனக்கு மாதந்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த பெண் இத்துடன் நிற்கவில்லை.. தன்னுடைய வாதத்தை கோர்ட் நம்ப வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கணவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். அந்தப் போட்டோவில் இருக்கும் பெண் தான் கணவரின் இரண்டாவது மனைவி என்று கோர்ட்டில் உறுதியாக வாதிட்டார்..
குவாலியர் கோர்ட்டில் சாதித்த மனைவி
இந்த வழக்கின் விசாரணையின்போது கணவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. இதுவே அந்த பெண்ணுக்கு வசதியாக போய்விட்டது.. அந்த பெண் அளித்த போட்டோ ஆதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஒருதலைப்பட்சமாக விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இந்த விவாகரத்து உத்தரவு குறித்து கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் கணவருக்குத் தெரியவந்தது. உடனடியாக நீதிமன்ற ஆவணங்களை நகலெடுத்து ஆய்வு செய்த அவருக்குப் பேரிடி காத்திருந்தது. தனது மனைவி 2வது மனைவி என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருந்த பெண்ணை போட்டோவில் கண்டு ஆடிப்போனார் கணவர்..
சொந்த தங்கச்சி 2வது மனைவி
காரணம், கணவரின் சொந்த சகோதரியை, 2வது மனைவி என்று பொய் சொல்லி உள்ளார் மனைவி.. எப்போது ஒருமுறை குடும்ப நிகழ்வின்போது எடுக்கப்பட்ட போட்டோவாம் அது.. அந்த போட்டோவை வைத்து, ரத்த உறவையே தவறான உறவாக சித்தரித்து விவாகரத்து பெற்ற மனைவியின் துணிச்சலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார் கணவர்.
இதுகுறித்து கணவர் தரப்பு வழக்கறிஞர் ரவி சங்கர் குப்தா சொல்லும்போது, "அந்த போட்டோவில் இருந்த சகோதரிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற உண்மையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். போட்டோவில் இருப்பவர் யார் என்று தீர விசாரிக்காமல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு சட்டப்படி செல்லாது" என்று வாதிடுகிறார்.
ஆடிப்போன கணவர்
நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி, போலியான தகவல்கள் மூலம் விவாகரத்து பெற்ற மனைவியின் செயலை எதிர்த்து, பாதிக்கப்பட்ட கணவர் தற்போது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் குவாலியர் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.
"எனது சொந்தத் தங்கையையே எனக்கு மனைவியாகச் சித்தரித்து, சமூகத்திலும் சட்டத்தின் முன்னும் எங்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் திட்டமிட்டு வெட்டி ஒட்டி இந்த மோசடியைச் செய்துள்ளார்" என்று அவர் தனது மனுவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குடும்ப நீதிமன்றத்தின் அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களைச் சரியாகச் சரிபார்க்காமல் ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதும், ஒரு பெண் தனது சுயநலத்திற்காக புனிதமான உறவுகளை சிதைத்ததும் குவாலியர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications