ஆஹா! எடப்பாடிக்கு எதிராக திரும்பும் முக்கிய புள்ளி! திடீர் சைலண்டாமே.. ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட்? அவரா?
சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய மாஜி அமைச்சர் ஒருவர் திடீரென சைலண்ட் மோடிற்கு சென்று இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் கடந்த இரண்டு மாதங்களாக ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. ஜூலை 23ம் தேதி பொதுக்குழு, ஆகஸ்ட் 11ம் தேதி பொதுக்குழு, அதிமுக அலுவலக கலவரம், ஓபிஎஸ் நீக்கம், எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனது, ஓ பன்னீர்செல்வம் வழக்கில் வென்று மீண்டும் ஒருங்கிணைப்பாளர் ஆனது என்று ஏகப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன.
இந்த தொடர் சம்பவங்களால் அதிமுகவில் கடுமையான குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போதா குறைக்கு தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடும் செய்துள்ளார்.
இதுவரை நடந்த வழக்குகளில் சட்ட ரீதியாக ஓ பன்னீர்செல்வம் கையே ஓங்கி இருக்கிறது.

என்ன நடந்தது?
இப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருப்பதால் அவருக்கு ஆதரவாக நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கி உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக தாவ தொடங்கி உள்ளனர். எடப்பாடியின் கோட்டையாக விளங்கும் மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.

மாற்றம்
இவர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். திண்டுக்கல் சீனிவாசன் பக்கம் இருந்தவர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளார். எடப்பாடி சட்ட ரீதியாக பலமாக இல்லை என்று பலர் இப்படி தாவ தொடங்கி உள்ளனர். நேற்று முதல்நாள் கூட ராஜ்ய சபா எம்பி தர்மர் ஓ பன்னீர்செல்வத்தையோ ஆதரித்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இப்படி வரிசையாக நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக அணி தாவி வருகிறார்கள்.

வெயிட்டிங்
இன்னும் சிலர் முழுமையாக தீர்ப்பு வரட்டும் என்று காத்து இருக்கின்றனர். வழக்கு எப்படியும் உச்ச நீதிமன்றம் வரை செல்லும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அணி மாறலாம் என்று திட்டத்திலும் சிலர் இருக்கிறார்கள். அதன்படியே தற்போது தென்னக மாஜி அமைச்சர் ஒருவர் கொஞ்சம் அமைதியாகி உள்ளார். எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார். இவரின் அமைதிக்கு காரணம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்பதே என்கிறார்கள்.

அமைதி ஏன்?
அதாவது அமைதியாக இப்போது இருக்கலாம்.. தீர்ப்பு வந்த பின் யாரை ஆதரிப்பது என்று என்று முடிவு எடுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். அந்த மாஜி அமைச்சர் ஓபிஎஸ்சூடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னகத்தில் ஆர்பி உதயகுமார் வேகமாக வளர்க்கிறார். இதனால் அப்செட் ஆன அந்த மாஜி அமைச்சர் மீண்டும் ஓபிஎஸ் பக்கமே செல்லலாம். ஆனால் தீர்ப்பு வரட்டும்.. பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications