அடிவயிறு கலங்குது.. ஓபிஎஸ்ஸே தேவலாம் போலயே.. "வெல்லத்தை" காணோமாம்.. மாஜி பேச்சால் வாயடைத்துபோன மதுரை
மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் தந்த வெல்லம் உருகி கரைந்து போய்விட்டதாம்.. அதை காணோம் என்று போலீசில் மக்கள் புகார் தந்து கொண்டிருப்பதாக ஆர்பி உதயகுமார் பேசிய பேச்சை கேட்டு மதுரை மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.. எந்த முறையும் இல்லாமல் அதிமுக இந்தமுறை தனித்து போட்டியிடுகிறது..!
முழுக்க முழுக்க திமுக அரசை டார்கெட் செய்து களமிறங்கி உள்ளது.. குறிப்பாக 2 விஷயங்களை பிரச்சாரங்களில் கையில் எடுத்துள்ளது...

ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்று, பெண்களுக்கு 1000 ரூபாய், மற்றொன்று பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் விவகாரம்.. இந்த ஊழல் விவகார குற்றச்சாட்டை முதன்முதலில் ஆரம்பித்து வைத்ததே எடப்பாடி பழனிசாமிதான்.. ஒரு மாத காலமாகவே இந்த ஊழல் புகார் குறித்து எங்கு போனாலும் அதிமுக தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.. இந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டுக்கே போய்விட்டனர்.

ஆர் உதயகுமார்
இப்போது பிரச்சாரங்களிலும் இதே ஊழல் புகார் எதிரொலிக்கிறது.. ஓபிஎஸ் முதல் செல்லூரி ராஜு வரை ஊழல் புகாரை தெரிவித்து வரும் நிலையில், இப்போது மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் அதையே தெரிவித்துள்ளார்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 27 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.

முறைகேடு
அப்போது அவர் பேசியபோது, "பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு செய்து 65% கொள்ளையடித்தது தான் திமுக அரசு.. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் இன்னும் 3 ஆண்டுகளில் வருவதாக ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது... அதனால் எதைஎதையோ உளறி வருகிறார். ஸ்டாலின் இந்த மதுரையின் வளர்ச்சிக்காக எந்த திட்டமும் செய்யவில்லை. ஒரே ஒரு இடம்தான் செய்திருக்கிறார்... அதுவும் அவருடைய அப்பா பெயரில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்..

அதிமுக அரசு
கடந்த காலங்களில் பொங்கல் பரிசாக அதிமுக அரசு 1000 ரூபாய் மற்றும் 2,500 ரூபாயும் தரமான பொங்கல் பரிசும் வழங்கியது. ஆனால், இப்போதைய ஆட்சியில் உள்ள திமுக பொங்கல் பரிசு கொடுத்தது.. அதில் வழங்கப்பட்ட மண்டை வெல்லம் வீடு சென்று சேர்வதற்குள் வடிந்து கீழே விழுந்துவிட்டது. அதனைக் காணோம் என மக்கள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளித்துள்ளனர்.

முறைச்சு பார்க்குது
ஏற்கனவே பொங்கலுக்கு வழங்கிய அரிசியை பற்றி ஓபிஎஸ் குறை சொல்லி வருகிறார்.. அந்த அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் அது முறைச்சு முறைச்சு பார்க்குது என்றார்.. இப்போது, ரேஷனில் தந்த வெல்லம் உருகி விடவும் அதை காணோம் என்று மக்கள் ஸ்டேஷனில் புகார் தந்து கொண்டிருக்கிறார்கள் என்று உதயகுமார் பேசியுள்ளதை கேட்டு மதுரையே வாயடைத்து போய்விட்டது.. இதுக்கு ஓபிஎஸ் பேசியதே பரவாயில்லை போலயிருக்கே என்று முணுமுணுத்து வருகின்றனர்!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications