Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று மறுபிறவி எடுக்குமா? ரோவர் ஓகே.. ஆனால் விக்ரம் லேண்டர் தான்! மயில்சாமி அண்ணாதுரை முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென்துருவத்தில் தூக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை இன்று செயல்பாட்டுக்கு வருமா? என்பது குறித்த கேள்விக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவ ஆய்வுக்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Will Chandrayaan 3 Vikram Lander and Pragyaan Rover be function today? Mylaswamy Annadurai says this

இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டன. நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று பிரக்யான் ரோவர் தகவல்களை சேகரித்து விக்ரம் லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது.

நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. மேலும் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பியது. நிலவை பொறுத்தமட்டில் 14 நாள் பகல், 14 நாள் இரவாக இருக்கும். விக்ரம் லேண்டர், ரோவர் உள்ளிட்டவை சோலார் பேனல்கள் மூலம் தான் சூரியஒளியை பெற்று ஆய்வு செய்து வந்தன.

இதையடுத்து நிலவில் இரவு தொடங்கியதால் கடந்த 2ம் தேதி ரோவரும், 4ம் தேதி விக்ரம் லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது நிலவில் சூரியஒளி பட தொடங்கி உள்ளது. நேற்று முதல் நிலவின் தென்துருவம் விடியல் தொடங்கியது. அடுத்த 14 நாட்கள் பகல் பொழுது இருக்கும். இதனால் இந்த பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை மீண்டும் கண்விழிக்க செய்யும் பணி தொடங்கியது.

Will Chandrayaan 3 Vikram Lander and Pragyaan Rover be function today? Mylaswamy Annadurai says this

நேற்றைய முயற்சியில் லேண்டர், ரோவரிடம் இருந்து இஸ்ரோவால் சிக்னல்களை பெற முடியவில்லை. இன்று 2வது நாளாக சிக்னல்களை பெற்று ரோவர், லேண்டருக்கு மறுபிறவி கொடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் தான் சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனரான தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையிடம் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உயிர்த்தெழுமா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‛‛உங்களை போல் தான் நானும் காத்திருக்கிறேன். பிரக்யான் ரோவர் மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதற்கு காரணம் என்னவென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் விக்ரம் லேண்டரை பொறுத்தவரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+