மிகப்பெரிய நாள்.. ஸ்டாலின் மட்டும் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டால்.. தேசிய அரசியலே அதிரும்!
சென்னை: இன்று தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வர உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஸ்டாலினின் பேச்சு அவரது அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாக பார்க்கப்பட்டது.

ஸ்டாலின் தனது பேச்சில், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன். கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்.நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம்.
மோடி அரசை வீழ்த்த வேண்டும்.வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம்.மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும்.ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக என்று ஸ்டாலின் முதல் ஆளாக காங்கிரஸ் எம்பி ராகுல் பெயரை முன்மொழிந்தார்.
ஆனால் அப்போது ராகுல் காந்தியின் அறிவிப்பை மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் விரும்பவில்லை. அப்போது எதிர்க்கட்சிகள் இப்போது இருப்பது போல ஒன்றாக கூட்டணியும் அமைக்கவில்லை. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்பு இப்ப்பது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு கவனம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 12-ந் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவையில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று 12-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் ராகுல் காந்தி, நெல்லை மற்றும் கோவையில் பிரசாரம் செய்கிறார். கோவையில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்தியா கூட்டணியில் இப்போது பிரதமர் வேட்பாளர் இல்லை.
ஸ்டாலின், கெஜ்ரிவால், மம்தா, கார்கே என்று பலர் பெயர் இதில் வேட்பாளராக அடிபடுகிறது. அப்படி இருக்க முதல்வர் ஸ்டாலின் யார் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிடுவாரா.. ராகுல் பெயரை கடந்த முறை சொன்னது போல இந்த முறை ராகுல் அல்லது வேறு யாருடைய பெயரையாவது சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications