அமைச்சர் பதவி அறிவிச்சதுமேவா? டிஆர்பியின் அந்த போஸ்டிங்! ஸ்டாலினிடம் நூல் விடும் புள்ளிகள்.. அதிருதே
சென்னை: தமிழ்நாடு அமைச்சராக போகும் டிஆர்பி ராஜா ஏற்கனவே திமுக ஐடி விங் செயலாளராகவும் இருக்கிறார். அவரின் பதவிக்கு திமுகவில் தற்போது சிலர் அடிபோட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வலம் வர தொடங்கி உள்ளன. அந்த வகையில் முதல் மாற்றமாக நேற்று அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் இருந்தன.
ஆனால் அவரை நீக்குவதற்கு இந்த புகார்கள், சர்ச்சைகளை தாண்டி அவரின் செயல்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆம்.. அவர் பால்வளத்துறையை மிக மோசமாக நடத்தியது. பால் தட்டுப்பாட்டை தவிர்க்க தவறியது, பால் உற்பத்தியில் நவீனங்களை புகுத்த தவறியது என்று மேற்கொண்ட சில செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

இந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய அமைச்சரவையில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாது.
இன்னொரு பக்கம் அமைச்சர் பதவியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 2 வருடமாகவே அமைச்சராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போதே இவருக்கு அமைச்சரவை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இவருக்கு தொழில்துறை அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி விங் செயலாளர்: அமைச்சராக போகும் டிஆர்பி ராஜா ஏற்கனவே திமுக ஐடி விங் செயலாளராகவும் இருக்கிறார். அவருக்கு முன்பாக தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த வருடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பணிச்சுமை காரணமாக அந்த பதவியில் இருந்து பிடிஆர் ராஜினாமா செய்தார்.

அதாவது ஐடி பிரிவை இவர் சரியாக கவனிக்கவில்லை. அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் ஐடி பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் திமுகவில் இதை பிடிஆர் புள்ளி விவரங்களை சேமிக்கும் டேட்டா டீம் போல நடத்துகிறார் என்று தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
அதேபோல் பிடிஆரும் சில இடங்களில் ஐடி பிரிவு என்பது டேட்டா கலெக்ட் செய்யும் பிரிவுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் திமுகவின் ஐடி பிரிவு சமூக வலைத்தளங்களில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சனங்கள் கட்சியினருக்கு இடையே வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐடி பிரிவை புதுப்பிக்கும் முயற்சியில் திமுக தலைமை இருப்பதாக கூறப்பட்டது.
இவரின் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்தே டிஆர்பி ராஜா இந்த பதவிக்கு வந்தார். அமைச்சர் பதவியில் இல்லாத காரணத்தால் கட்சியில் ஐடி விங் செயலாளர் என்ற முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில்தான் டிஆர்பி அமைச்சரவாதால் தங்களுக்கு கட்சி பதவி கிடைக்குமா என்று சிலர் இப்போதே ஸ்டாலினை சுற்ற முயன்று வருகிறார்களாம். அதாவது ஸ்டாலின் ஐடி விங் செயலாளர் பதவியில் டிஆர்பி ராஜா தொடருவாரா என்ற சந்தேகத்தில் இப்போதே அந்த பதவிக்கு ஸ்டாலினுடன் அடிபோட்டு வைக்க சிலர் பிளான் போட்டு வருகிறார்களாம்.
முக்கியமாக மாற்று கட்சியில் இருந்து சமீபத்தில் திமுக வந்த சிலர் அந்த பதவிக்கு அடிபோட்டு வருகிறார்களாம்.

திமுக வட்டாரம்: ஆனால் திமுக வட்டாரத்தில் விசாரித்ததில்.. இப்போதைக்கு டிஆர்பி ராஜாவை அந்த பொறுப்பில் இருந்து மாற்ற மாட்டார்கள். அவர் அந்த பொறுப்பில் தொடர்வார்.. அமைச்சராகவும் இருப்பார்.
அவர் இப்போதுதான் ஐடி விங் செயலாளர் ஆனார். அவர் வந்த பின் ஐடி விங் 2.0 வியூகம் தொடங்கப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கட்டமைப்பு ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது.
இப்போது திடீரென டிஆர்பி ராஜா மாற்றப்பட்டால் இந்த கட்டமைப்பிற்கு சிக்கல் ஏற்படும். ஏனென்றால் 2024ல் லோக்சபா தேர்தல் வரை இந்த கட்டமைப்பு மாற கூடாது. அப்போது ஐடி விங்கின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு அதன்பின் வேண்டுமானால் மாற்றங்களை செய்யலாம்.
இப்போதைக்கு குறைந்தது இன்னும் 2 வருடங்கள் டிஆர்பியே ஐடி விங்கையும் பார்த்துக்கொள்ளட்டும் என்ற முடிவில் திமுக தலைமை இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications