இணையும் கரங்கள்? தமிழ்நாட்டில் "புள்ளி" வைக்கும் ராகுல்.. ஸ்டாலினுக்கு செம சான்ஸ்.. ரெடியான கதர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க பிரம்மாண்ட யாத்திரை நடத்த உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த யாத்திரையில் கலந்து கொள்வாரா.. ராகுலுடன் ஒரே மேடையில் தோன்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான பிரச்சனை நிலவி வரும் நிலையில் அக்கட்சி பாரத் ஜோடா யாத்திரை என்ற மிகப்பெரிய யாத்திரையை நாடு முழுக்க நடத்த உள்ளது. காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி தலைமையில் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் நாடு முழுக்க யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதை ராகுல் காந்திதான் தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் நடத்த போகும் மிகப்பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாடு முழுக்க இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இருந்து கேரளா.. அங்கிருந்து கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை அடக்கி கடைசியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இதற்காக நடைபயணம் செல்ல உள்ளார்.

நடைபயணம்

நடைபயணம்

இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பல தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி சாராத அறிவுஜீவிகள் பலரையும் கூட ராகுல் காந்தி பயணத்தின் ஒரு பகுதியாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த பயணத்திற்கு கன்னியாகுமரியில்தான் ராகுல் காந்தி தொடக்க புள்ளி வைக்க உள்ளார். சென்னைக்கு வரும் ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி ஸ்ரீ பெரும்பதூரில் தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதையை செய்கிறார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி என்று பேரணி தொடங்குகிறார். இவர் திருவனந்தபுரம் வரை செல்லும் வழியில் 3 நாட்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் அவருடன் பயணம் செய்ய உள்ளனர். மொத்தம் 1 லட்சம் பேர் ராகுல் காந்தியுடன் இந்த பயணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த பயணத்தில் கட்சி சாராத நபர்கள் நட்பான கட்சியினரும் கலந்து கொள்வார்கள் என்பதால் முதல்வர் ஸ்டாலினும் குமரியில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறிவிட்டார். காங்கிரசுடன் உள்ள கொள்கை கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டார். இந்த நிலையில் ஸ்டாலின் இந்த பயணத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

தேசிய அரசியல்

தேசிய அரசியல்


ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் அரசியல் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தேசிய அளவில் திமுகவை கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் இந்த பயணத்தில் ராகுலுடன் துவக்க விழா மேடையில் தோன்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிகழ்விற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மிக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+