சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முக்கிய "புள்ளியை" தட்டி தூக்க செம போட்டி.. திமுகவா? பாஜகவா?.. மிரண்டு கிடக்கும் அரசியல் கட்சிகள்..!

மகேந்திரன் பாஜகவில் இணைவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியில் இருந்து விலகியவர்களுக்கும், தோல்வியடைந்த மூத்த தலைகளுக்கும் ஏகப்பட்ட கிராக்கிகள் அரசியல் களத்தில் கூடியுள்ளது.. இதனால், திமுக ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் பிஸியாகி வருகின்றன..!

Recommended Video

    முக்கிய புள்ளியை தட்டி தூக்க செம போட்டி.. திமுகவா? பாஜகவா? | Oneindia Tamil

    கடந்த முறை எம்பி தேர்தலில் கோவையில் பாஜக மண்ணை கவ்வும் என்பது எதிர்பார்த்த ஒன்று என்பதால்தான், சிபிஎம் வேட்பாளர் பிஆர் நடராஜன் வெற்றி எளிதானது..

    அதேசமயம், மநீம வேட்பாளர் மகேந்திரனுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்திருந்தார்.. தபால் ஓட்டுக்களிலும் மகேந்திரனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

    திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்? காத்திருக்கு பெரிய பதவி! திமுகவில் இணைகிறார் ம.நீ.ம முன்னாள் துணை தலைவர் மகேந்திரன்? காத்திருக்கு பெரிய பதவி!

     செயல்திட்டம்

    செயல்திட்டம்

    கோவை தொகுதியில் மநீமய்யத்துக்கு ஓரளவு ஆதரவு தளமும், தொழிலதிபர்கள், இளைஞர்கள் நகர்ப்புற வாக்குகள் என இருந்தாலும், மகேந்திரனுக்கென்று தனிப்பட்ட அளவுக்கு ஓட்டு வங்கியும் அப்போது விழுந்துள்ளது.. இவர் ஒரு தொழிலதிபர் என்பதுடன், கோவைக்கான செயல்திட்டத்தை வெளியிட்டு, அதை எத்தனை நாட்களுக்குள் எப்படி செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதிதான் மகேந்திரனை வேறு தளத்துக்கு கோவையில் எடுத்து சென்றது.

    வாக்குகள்

    வாக்குகள்

    ஆளும் தரப்புக்கு எதிரான வாக்குகளை மய்யம் பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், பாஜகவின் வாக்குகளைத்தான் மய்யம் சிதறடித்தது.. மகேந்திரனுக்கே இவ்வளவு வாக்குகள் விழுமென்றால், தனக்கு மேலும் அதிகமாக விழும் என்று கமலும் ஒரு கணக்கு போட்டார்.. அத்துடன் மீடியா வெளிச்சமும் சேர்ந்தது.. எனினும் கமல் தோல்வியை தழுவினார்.

    ஷாக்

    ஷாக்

    இந்த தோல்வியை கமல் ஜீரணிக்கும் முன்பேயே, மகேந்திரன்தான் முதல் ஷாக்கை கமலுக்கு தந்தார்.. இறுதியில் கமலை பலவாறாக விமர்சித்துவிட்டு, வெளியே வந்தார்.. பேட்டிகளும் காரசாரமாக தந்தார்.. இத்தனை வருடம் மய்யத்துக்கு பொருளாதார ரீதியாக தாங்கி பிடித்து கொண்டிருந்தவர் மகேந்திரன்தான்.. கோவையில் மய்யத்துக்கான வாக்கு வங்கியை ஓரளவு பலப்படுத்தி தந்ததில் மகேந்திரனின் பங்கும் அளப்பரியது.

    அதிமுக

    அதிமுக

    பொதுவாக ஒரு கட்சிக்கு, திறமையுள்ள நிர்வாகிகளைவிட பசையுள்ள நிர்வாகிகளுக்கே அதிக டிமாண்ட் இருக்கும்.. அந்த வகையில், கட்சியை விட்டு வெளியே வந்த மகேந்திரனுக்கு, மறுநாளே டிமாண்ட் கூடியது.. திமுக பக்கம் இவர் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதற்கு காரணம், எவ்வளவோ முயற்சி எடுத்தும், கொங்குவில் திமுகவின் பலம் கூடவே இல்லை.. வழக்கம்போலவே அதிமுகவின் பலமே பெருகி வருகிறது.

    சறுக்கல்

    சறுக்கல்

    கடந்த முறையும் சரி, இந்த முறையும் சரி திமுகவுக்கு சறுக்கலை தந்ததும் இதே கொங்கு மண்டலம்தான்.. அந்த வகையில் செல்வாக்கு மிக்க தலைவர்களை இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.. மகேந்திரனை உள்ளே கொண்டு கொங்கு தொழிலதிபர்களை கணிசமாக திமுகவுக்குள் கொண்டு வரலாம் என்பதே பலே திட்டமாக இருக்கிறது.. எனவே மகேந்திரனும் ஆதாயம் கருதி திமுக பக்கம் செல்லலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

    பாஜக

    பாஜக

    ஆனால், பாஜக முந்திக் கொண்டுள்ளதாம்.. மகேந்திரனை தங்கள் பக்கம் வளைக்க பாஜகவும் முயற்சி செய்கிறதாம்.. கடந்த முறை பாஜகவின் ஓட்டுக்களைதான் இந்த மகேந்திரன் பிரித்தார்.. இந்த முறை பாஜகவை எதிர்த்துதான் தொகுதியில் மநீம போட்டி போட்டு போராடியது.. அப்படி இருக்கும்போது மகேந்திரனுக்கு பாஜக வலை வீசுவதாக தகவல்கள் வருவது ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஏற்கனவே கோவை பகுதியில் பாஜகவுக்கு போதுமான மற்றும் நிலையான செல்வாக்கு இருந்து வருகிறது.. எனவே, மகேந்திரன் போன்றோரின் வருகையால், இருக்கும் செல்வாக்கை மேலும் அதிகரிக்க நினைக்கிறது. இப்படி பலத்தை கூட்டுவதால், அது வரப்போகும் எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நம்புகிறது.. திமுகவா? பாஜகவா? இனி மகேந்திரன் சாய்ஸ்தான்.. பார்ப்போம்..!

    English summary
    Will Coimbatore Mahendran join in BJP or DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X