எத்தனை வழக்கு வந்தாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம்: திருமாவுடன் சேர்ந்து உதயநிதி ’முழக்கம்’
சென்னை: எத்தனை வழக்குகள் வந்தாலும் சனாதனத்தை எந்த நாளும் எதிர்ப்போம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யுடன் இணைந்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. முதலில் திருமாவளவன் கையெழுத்திட பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: சனாதனம் என்பது பல நூற்றாண்டு பிரச்சனை.
சனாதனத்தை நாங்கள் எந்த நாளும் எதிர்ப்போம். சனாதனம் குறித்து பேசியதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை நாங்கள் சந்திப்போம்.
தற்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முழுமையாக பங்கேற்க வேண்டும். அனைத்து இயக்கத்தினரையும் இது தொடர்பாக சந்திக்க உள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்ட பின்னர் ஜனாதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அப்போது திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்தி இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications