Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திமிங்கலம்" சிக்கிருச்சு.. "அவர்" பாஜகவுக்கு போறாராமே? அண்ணாமலை போடும் "தாமரை கோலம்".. விழித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது.. எப்படியாவது இந்த முறை, தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறது. இதுகுறித்த சில முக்கிய தகவல்கள், நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளன.

நடைபயணம் மூலம் ராமநாதபுரத்தில் பாஜகவின் ஆதரவை பெருக்கி, திமுகவுக்கும் ஒரு "செக்" வைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் எண்ணமாக உள்ளது. அதனாலேயே தமிழக பாஜக தலைவரின் யாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

Will DMK defeat Tamil Nadu BJPs strategies and What are the plans of BJP Annamalai

உள்துறை அமைச்சரே நேரடியாக கிளம்பி வந்து இந்த பாதயாத்திரையை துவக்கி வைத்தார்.. அதன்படி, ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் நடைபயணங்கள் நடந்தன.

அண்ணாமலை: இதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்குள் அண்ணாமலை பயணம் மேற்கொண்டு வந்தபோது, திடீரென, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அழைப்பின் பேரில் டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்ததாக கூறப்பட்டது. பாஜக சார்பில் சார்பில் பொதுகூட்டம் நடைபெறவிருந்த நேரத்தில், இப்படிஒரு அவசர அழைப்பு பல குழப்பங்களையும், கேள்விகளையும் தமிழக அரசியல் களத்தில் எழுப்பியிருந்தது.

பாதயாத்திரை: முக்கியமாக, அதிமுகதான் இதற்கெல்லாம் காரணம் என்று சலசலக்கப்பட்டது. காரணம், இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கும்போதே, அதிமுக - தமிழக பாஜக உரசல் மேலும் அதிகமானது..

பாதயாத்திரையின்போது, செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, "ஓபிஎஸ்ஸை நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை, அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்" என்று ஒரு வார்த்தையை வீச, அது அதிமுக கூடாரத்தில் பற்றி எரிந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது... போதாக்குறைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறித்தும் அண்ணாமலையின் விமர்சனம் அதிமுக கூடாரத்தையே அதிர வைத்தது.

வார்த்தை மோதல்கள்: இதற்குநடுவில் ஜெயக்குமார் திடீரென சீனில் வந்தார்.. "அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்" என்று பஞ்ச் வைத்து தாக்கியிருந்தார். உடனே பாஜக நிர்வாகி கரு நாகராஜன் இதற்கு பதிலடி தந்தார்.. எம்பி தேர்தல் வரப்போகும்நேரத்தில், அதிமுகவும், தமிழக பாஜகவும் மறுபடியும் வார்த்தை மோதல்களில் கட்டி ஆரம்பித்துவிடவும், இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்தது.

அதிமுகவுடனான, கூட்டணியை பாஜக மேலிடம் தொடர்ந்து உறுதி செய்து வரும்போது, வழக்கம்போல் அதிமுகவுடனான அண்ணாமலையின் மோதல்போக்கு, டெல்லிக்கு சங்கடத்தை தருவதாகவே கருதப்பட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக தரப்பில் பலமுறை, பாஜக மேலிடத்தில் வலியுறுத்தப்பட்டும், இதுவரை எந்த மாற்றமும் நடத்தப்படவில்லை.

சொதப்பல்: அதனால் இந்த முறை, பாஜக தலைவர்கள் அண்ணாமலையை நிச்சயம் கடிந்து கொள்வார்கள், சத்தம் போடுவார்கள், இணக்கமாக செல்லும்படி அறிவுறுத்துவார்கள் என்றெல்லாம் அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் பார்த்தால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. இன்னும்சொல்லப்போனால், அண்ணாமலை மீதான மதிப்பு மேலிட தலைவர்களுக்கு அதிகரித்தபடியேதான் உள்ளதாம். இப்படிப்பட்ட சூழலில், பாதயாத்திரையை இடையில் நிறுத்திவிட்டு , 3 நாள் சென்னைக்கு ஓடி வந்தார் அண்ணாமலை.

பாதியில் பாதயாத்திரை நின்றதுமே, இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று பல சந்தேகங்கள் இணையத்தில் வட்டமடிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், இதுகுறித்துதான், நமக்கு ஒரு பிரத்யேக செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது, அண்ணாமலையின் யாத்திரைக்கு, கூட்டம் அவ்வளவாக சேரவில்லை.. இதனால், நடைப்பயணம் சொதப்பியதும், அமல்பிரசாத் ரெட்டி மற்றும் நரேந்திரன் ஆகிய 2 பேரும், பயணத்தை சரியாக ஒருங்கிணைக்கவில்லை என்பதால் அண்ணாமலை அப்செட்டாகிவிட்டாராம்.

Will DMK defeat Tamil Nadu BJPs strategies and What are the plans of BJP Annamalai

பாதியிலேயே ரத்து: பயணத்தில் எங்குமே கூட்டமில்லாமல் இருந்ததை பார்த்து, கடுப்பான அண்ணாமலை, பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டாராம். பிறகு, உடனடியாக சென்னைக்கு ஓடோடி வந்த அண்ணாமலை, நிர்வாகிகளை வீடியோ கான்ஃபர்ன்சில் தொடர்புகொண்டு செமையாக டோஸ் விட்டிருக்கிறார்..

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் பழனிவேல் ராஜனை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவதற்காகத்தான் சென்னைக்கு ஓடி வந்தார் என்றும், அவரை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியை அண்ணாமலை எடுத்துள்ளார் என்றும் அதற்காகத்தான் பயணத்தை இடையில் நிறுத்தினார் என்றும் மேல்மட்ட வட்டாரங்களில் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

பிடிஆர்??: பிரபலங்களையும், மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களையும், சொந்த கட்சியில் அதிருப்தி அடைந்தவர்களையும் குறிவைத்து, அவர்களை, தங்கள் பக்கம் தூண்டில்போட்டு இழுத்துக் கொள்வது என்பது, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே செய்யக்கூடிய நடைமுறை அரசியல்தான்..

இருந்தாலும், பிடிஆர் விஷயத்தில் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டாலும்கூட, பிடிஆருக்கான முக்கியத்துவம் என்ன என்பது தெரியவில்லை..

உண்மையா? பொய்யா?: சமீபத்தில், மதுரை அண்ணாநகர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட விழாவில் அனைத்து தலைவர்களும் பேசியபோதும், பிடிஆரை பேசுமாறு யாரும் அழைக்கவில்லை.. இதனால் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துகொண்டு பிடிஆர் அங்கிருந்து வெளியேறியதாகவும், வேண்டுமென்றே பிடிஆரை ஓரங்கட்ட முயற்சிப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்திருந்தன.

இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக பக்கம் இழுக்கும் முயற்சி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தால், திமுகவின் நிலை???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+