பரம்பரை சொத்து பத்திரம்.. உயிலில் இது முக்கியம்.. உயில் எழுதினால் குழந்தைகளின் செல்ல பெயரை எழுதலாமா?
சென்னை: உயில் எழுதும்போது, குழந்தைகளின் செல்லப்பெயர்களை குறிப்பிடலாமா? ஒருவர் உயில் எழுதினால் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் தெரியுமா? இதுகுறித்து சட்டவல்லுநர்கள் சொல்லும் அறிவுரைகள் என்னென்ன?
எப்போதுமே ஒருவர் உயிலை தன்னுடைய கையில் எழுதுவது நல்லது. வக்கீல் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றாலும், சிவில் வழக்கறிஞரை உடன்வைத்துக்கொண்டு உயில் எழுதினால் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.

18 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும், தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். ஆனால், ஒருசில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும்.. உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் 2 சாட்சிகள் தேவை... ஆனால், வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் சாட்சிகளின் கையெழுத்து, அவர்களின் நிரந்தர அட்ரஸ் தெளிவாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.
உயிலில் குறிப்பிடப்படும் தகவல்கள் தெளிவாக புரியும்படி இல்லாத காரணத்தால், சொத்து பங்கீடு சமயத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.. எனவே, உயிலை எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சட்ட வல்லுனர்கள் சொல்லும் சில தகவல்களை பார்க்கலாம்.
- ஒருவரது சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டும் உயில் எழுதி வைக்க முடியும்... தன்னுடைய அப்பா வழி பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க இயலாது.
- ஒருவரிடம் உள்ள அனைத்து சொத்துகள் பற்றிய முழுவிவரங்கள், அதாவது சர்வே எண், வீடு மற்றும் இடத்தின் அளவுகள், அவற்றிற்கான பட்டா எண்கள், சம்பந்தப்பட்ட சொத்து உள்ள கிராமம், கிரயப்பத்திர எண்கள் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு எழுதவேண்டும்.
- எந்த சொத்து யாருக்கு உரியது என்பதையெல்லாம் தெளிவாக குறிப்பிட்டு, அவர்களது பெயர் மற்றும் உறவுமுறைகளையும் சரியாக குறிப்பிட வேண்டும். பெரிய அளவுள்ள வீடு அல்லது அடுக்கு மாடியாக இருந்து, அதை பிரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், எந்தப்பகுதி யார் யாருக்கு? என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். கீழ்த்தளம் உள்ளிட்ட இதர தளங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதேபோல, கீழ்த்தளம் உள்ளிட்ட இதர தளங்கள் யார் யாருக்கு என்ற விபரங்களையும், அவர்களின் உரிய பெயர்களுடன் உயிலில் தெளிவாக இருக்க வேண்டும்.
- சிறிய அளவுள்ள சொத்துகள் என்றாலும் அதையும் உயிலில் குறிப்பிட்டாக வேண்டும். சிலர் தங்களுடைய பேரக்குழந்தைகளை குறிப்பிடும்போது, அவர்களது சரியான பெயர்களை குறிப்பிடாமல், செல்லப்பெயர்களை எழுதி விடுகிறார்கள்.. பிற்காலத்தில் சிக்கல் எழுவதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது. எனவே, குழந்தைகள் என்றாலும்கூட, முழு பெயரையும் உயிலில் குறிப்பிடுவது அவசியம்.
- வழக்கறிஞர், ஆவண எழுத்தர் அல்லது நன்றாக விவரம் தெரிந்தவர் ஆகியோர் மூலமாக உயில் எழுதுவது பாதுகாப்பானது.. மேலும், பச்சை அல்லது சாதாரண வெள்ளைத்தாளில் எழுதினாலே போதுமானது.
- உயில் எழுதுவதற்கு சாட்சி கையெழுத்துகள் இருப்பதைபோலவே, உயில் எழுதியதுமே நம்பிக்கைக்குரிய 2 நபர்களிடம் அதுபற்றி சொல்லி வைப்பது அவசியம். அப்போதுதான், தக்க சமயத்தில் உரியவர்களிடம் உயில் சென்று சேரும்
- உயிலை பதிவு செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் உயிலை தெளிவாக எழுதி, கீழே கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையும் பதிக்க வேண்டும். 2 நபர்களது சாட்சிக்கையெழுத்தும் அவசியமானது
- உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. ஒருவர் சாதாரண பேப்பர் முதல் பத்திர தாள்கள்வரை எதில் எழுதியிருந்தாலும் அந்த உயில் சட்டப்படி செல்லும்.
- வேறு யாருக்காவது சொத்து கொடுத்திருந்தால், அதையும் உயிலில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உயில் சாசனத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்..
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications