உயில் சாசனம் மூலம் பத்திரப்பதிவு.. கிழிக்கப்பட்ட அசல் ஆவணங்கள்.. யாரந்த பெண்? பரபரக்கும் புதுச்சேரி
சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மோசடிகள் நடந்து, சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி வருகிறார்கள். அந்தவகையில் புதுச்சேரியிலும் ஒரு மோசடி நடந்துள்ளது. இதில், சென்னையை சோ்ந்த பெண் ஒருவர் போலீஸில் சிக்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டே செல்கிறது.. அதிலும் பத்திரப்பதிவு துறையில் இந்த லஞ்ச - ஊழல் விவகாரம் அதிகமாகவே தென்பட்டு வருகிறது.. எனவே, யாராக இருந்தாலும் சரி, லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதுமே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக பத்திரப்பதிவு இறங்கி வருகிறது..

இதில், பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதிகரித்து வருவது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம்கூட, பதிவுத்துறை ஐஜியாக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், லஞ்ச வாங்கிய 2 சார் பாதிவாளர்களை சஸ்பெண்ட் செய்தார். இருவருமே பெண் அதிகாரிகள் ஆவர்.
ராணி சஸ்பெண்டு: ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பணிகளை சிசிடிவியில் பார்வையிட்டு கொண்டிருந்தபோது, சார்பதிவாளர் ராணி லஞ்சம் வாங்கியிருக்கிறார். அதேபோல, கே.வி. குப்பம் பெண் அதிகாரியும் லஞ்சம் வாங்கியிருந்ததால், இருவரையுமே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், புதுச்சேரியிலும் லஞ்ச லாவண்யம் தலைதூக்கி வருகிறது.. நேற்றைய தினமும் ஒரு பெண் கைதாகி உள்ளார்.. புதுச்சேரியில் போலி உயில்கள் மூலம் கோயில் மற்றும் தனியாா் நிலங்களை சிலா் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ததாகப் புகாா் எழுந்தது.
உயில் ஆவணங்கள்: இந்த புகாரின்பேரில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிரடி ஆய்வுகள் நடந்தன.. அப்போதுதான், உழவா்கரை சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அசல் உயில் ஆவணங்கள் அனைத்துமே கிழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.. அந்த போலி உயில் ஆவணங்கள் மூலம், பத்திரப்பதிவும் நடந்து முடிந்திருக்கிறது.
இதையடுத்து சாா் பதிவாளா் பாலமுருகன் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.. விசாரணையில் போலி உயில் மூலம் கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த அப்துல் சமீத் நத்வீ என்பவா் கடலூா், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த சித்ரா என்பவரை சிறுமியாக காட்டி, அவா் பெயரில் உயில் எழுதி வைத்து, அதன்படி மேலும் பல ஆவண பரிவா்த்தனைகள் நடந்ததும் கண்டறியப்பட்டது.
மைனர் சித்ரா: இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் துறை குற்றவாளிகளைத் தேடிய நிலையில், சித்ரா (47) என்பவரை சென்னை மேடவாக்கம் பகுதியில் போலீஸாா் கைது செய்து, தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர.... 47 வயதான சித்ராவை, மைனர் சிறுமியாக காட்டி, போலியாக உயிலும் எழுதி, மோசடி நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை புதுச்சேரியில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications