Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இலை"யில் கருகும் தாமரை? "வேலையை" காட்டிய பாஜக.. திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி.. அடுத்து இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும், அதற்கு பதிலடிகளையும் பார்த்தால், எப்படியும் 3வது அணி உருவாகிவிடும் என்கிறார்கள்.. இது சாத்தியமா?

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வியூகத்தைதான், மேலிட பாஜக, எடுத்து வருவதாக தெரிகிறது.

Will Edapadi Palaniswami form alliance without BJP and What are the BJPs Mega Strategies

ஆனால், டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு, வெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மட்டுமே சாத்தியமாகாது என்பதையும், அதிலும், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை போன்ற தொகுதிகளில் தினகரனுக்கான செல்வாக்கு இன்னமும் அப்படியே உள்ளதால், டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு, கூட்டணி அமைக்க முடியாது என்பதையும் பாஜக மேலிடம் நன்கு அறிந்தே வைத்துள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி: எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், தென்மண்டலங்களில் ஓபிஎஸ், தினகரனும், கொங்கு மண்டலத்தில் பாமகவும் முக்கியம் என்பதால், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பாஜக, இனிவரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று அழுத்தமாகவே வலியுறுத்தும் என்கிறார்கள். இதைத்தான், நயினார், பொன்.ராதா, வானதி சீனிவாசன் உட்பட பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..

ஆனால், மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன.. இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...

சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது.. அதுகூட மேலிடத்தில் இருந்து மட்டுமே, உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால், வார்த்தை போர்கள் வலுப்பெற்று வருகின்றன.

கூட்டணி முறிவு: கடந்த சில நாட்களாகவே இந்த வார்த்தை போர்கள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.. "கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார், அதிமுக வெற்றிபெற கூடாதென திமுகவின் கைக்கூலியாக பேசுகிறார்" என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

"வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சிவி சண்முகத்துக்கு பதிலடி தந்துள்ளர்.

அதுமட்டுமல்ல, கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க முடியாது. பாஜக தனித்தன்மையுடன் 2026-ல் ஆட்சிக்கு வரும், இன்னொரு கட்சியின் B டீம், C டீமாக ஆகவோ வராது... மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் கிடையாது.. பதிலை நானே சொல்வேன்" என்ற அண்ணாமலையின் பேச்சு, எடப்பாடிக்கான மறைமுக பதிலடியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை விருப்பம்: சமீபகாலமாகவே, அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்பதே அவரது ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறதாம்.. அதனால்தான், தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும், கிளி கூண்டைவிட்டு பறக்க தயாராகிவிட்டது என்ற துணிச்சல் முடிவையும் தன்னுடைய நிர்வாகிகளிடம் அண்ணாமலை முன்வைத்திருந்ததாக சொல்கிறார்கள்.

தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும் என்ற துணிச்சல் முடிவையும் அண்ணாமலை பாஜக மேலிடத்திலேயே முன்வைத்து வருகிறார்.. அண்ணாமலை சொல்வதை, பாஜக தலைவர்களும் தவிர்த்துவிடாமல், கவனத்தில் எடுத்து கொள்கிறார்கள்.

தனித்து போட்டி: அதுமட்டுமல்ல, மொத்தத்தில் தமிழக பாஜக தலைமையிலான, அதாவது தன்னுடைய தலைமையிலான கூட்டணி அமைவதையே அண்ணாமலை பெரிதும் விரும்பவுதாகவும், 3வது அணியாக அதிமுக களமிறங்கட்டுமே என்ற எண்ணமும் தமிழக பாஜக தலைமைக்கு இருப்பதாகவும் தெரிகிறது.. அதன் ஒருபகுதியாகவே இந்த நடைபயணத்தை அண்ணாமலை துவக்கியிருக்கிறாராம். இந்த பாதயாத்திரையானது, கிட்டத்தட்ட அதிமுகவுக்கு எரிச்சலுட்டுவதாகவே பார்க்கப்படுகிறதாம்.

பலமா? பலவீனமா?: எனினும், அண்ணாமலை ஆரம்பித்துள்ள இந்த யாத்திரை, அதிமுகவை பலவீனப்படுத்துமா? அல்லது பாஜகவை பலப்படுத்துமா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர்கள் வலுத்து வருவதை பார்த்தால், பாஜக 3வது அணி அமைத்து போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

கடந்த முறை எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதே, கூட்டணி, சீட் விவகாரங்களை பேசிவிட வேண்டும் என்று பாஜக நினைத்ததாம்.. ஆனால், அண்ணாமலைதான் அதற்கு முட்டுக்கட்டை போட்டாராம்.

3வது அணி: இப்போதைக்கு அவசரப்படவேண்டாம், இன்னும் டைம் இருக்கிறது. டிசம்பர் மாத வாக்கில் கூட்டணி, சீட் பேச்சை, எடப்பாடி தரப்பில் பேசலாம் என்று தடுத்துவிட்டதாக செய்திகள் கசிந்தன. அதற்கேற்றபடி சமீபத்தில் உள்துறை அமைச்சரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தார். அப்போது சீட், தொகுதி விவகாரங்கள் குறித்து பாஜக மேலிட தலைவர்கள் பேச்சை எடுத்ததற்கு, எடப்பாடி பழனிசாமியும் எந்த பதிலையும் சொல்லவில்லையாம்..

"20 சீட்டுக்களை பாஜகவுக்கு ஒதுக்கிவிடுங்கள், எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்" என்று எடப்பாடியிடம் வலியுறுத்தப்பட்டதாம். அதற்கும் எடப்பாடி ஓகே சொல்லவில்லையாம்.

அதனால், இந்த நிமிடம்வரை சுமூக முடிவு இரு தரப்பிலுமே எட்டப்படவில்லை என தெரிகிறது. தற்சமயம், அதிமுக - பாஜக தலைவர்களிடம் நடந்துவரும் கருத்து மோதலை பார்க்கும்போது, 3 அணியாக பாஜக உருவெடுத்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதற்கேற்றவாறு, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அறிவித்துவிட்டார்..

இது ஜெயக்குமாரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது அதிமுகவின் ஒட்டுமொத்த கருத்தா என்று தெரியவில்லை.. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப்போகிறார்? என்பதைதான் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி உள்ளன.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+