விட்டதை பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி! முத்தரையரின் முத்தான வாக்குகள் யாருக்கு? மாஸ்டர் பிளான் அதிமுக
சென்னை: விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன.. இதில் அதிமுகவும் வேகம் காட்டி வருகிறது.. அந்தவகையில், கடந்த தேர்தலில் இழந்த ஓட்டுக்களை இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.. இதில் முத்தரையர் சமுதாய மக்களின் வாக்குகளையும் பெறுவதில் ஆர்வம் செலுத்தி கொண்டிருக்கிறது.. இந்நிலையில்தான், பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதிமுக சார்பில் மே 23ம்தேதி திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 23.5.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

சமுதாய வாக்குகள்
தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார் மாவட்டங்களில், முத்தரையர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கிட்டத்தட்ட 30 சட்டசபை தொகுதிகளில், வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக, அந்த சமுதாய மக்கள் உள்ளனர். தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் மட்டும் 5 லட்சத்து 38000 வாக்குகள் உள்ளதாக சொல்கிறார்கள்.. அதேபோல, திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, வேலூர் உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளிலும் முத்தரையர் வாக்குகள் கணிசமான வாக்கு வங்கி உள்ளன.
தஞ்சாவூர் தொகுதி
அதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் முத்தரைய சமுதாய சங்கத்தினர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் முத்திரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழகத்திலுள்ள ஒரு கோடிக்கு மேலாக வசித்து வரும் முத்தரையர் சமுதாயத்தினர் வாக்குகளை பெறவே அதிமுக முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.
இழந்த வாக்குகள்
கடந்த 1977 சட்டசபை தேர்தலிலிருந்தே முத்தரையர் சமூகத்தினர், பெரும்பாலும் அதிமுகவுக்கே வாக்களித்து வருகின்றனர். இதற்கு காரணம், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கலந்துகொண்டே ஒரு சாதி சங்க மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையார் சங்க மாநாடுதான் என்கிறார்கள்.. எனினும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முத்தரையர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், எதிலுமே அதிமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதிமுக - தவெக
எனவே வரப்போகும் தேர்தலில், இழந்த முத்தரையர் சமூக வாக்குகளை பெற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதையடுத்தே, 23ம் தேதி பெரும்பிடுகு முத்தரையர் 1350வது சதய விழாவை, சிறப்பாக கொண்டாட, அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, வரும் தேர்தலில் தஞ்சை தொகுதிக்கு முக்கியத்துவம் தரும்வகையில் தேர்தல் சீட் ஒதுக்கீடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தவெக தலைவர் விஜய் முத்தரையர் சமூக மக்களின் கவனத்தை பெற்று வருவதாக தெரிகிறது.. பெரும்பிடுகு முத்தரையில் சதயவிழாவில், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், இதுவரை 2 முறை கலந்து கொண்டு மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications