வீடுகளுக்கு அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் இவ்வளவு உயரப்போகிறதா? மின் வாரியம் விளக்கம் அளிக்குமா?
சென்னை: வீடுகள் மற்றும் கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயரப்போவதாக சமூக ஊடகங்களிலும், சில செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்து. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் இதுவே விதி. ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது
அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. இதன் படி மின் கட்டணத்தை உயர்த்தினால்அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும் என்கிற நிலை இருக்கிறது. 2022ல் உயர்த்தப்பட்ட கட்டணம் 2023ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு காரணமாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 2024ம் ஆண்டிலும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்னர்.
கடைசியாக தமிழகத்தில் 2022ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது அதன்படி மின் கட்டணம் எவ்வளவு என்பதை பார்ப்போம். தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாகும். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொருயூனிட் மின்சாரத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி பார்த்ததால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் இருக்கிறது.
100 யூனிட்க்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணமும், 210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணமும், 390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் 500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணம், 510 யூனிட்டுக்கு 1846 ரூபாய் கட்டணமும். 600 யூனிட்டுக்கு 2440 ரூபாய், 700 யூனிட்டுக்கு 3100 ரூபாய், 800 யூனிட்டுக்கு 3760 ரூபாய் கட்டணமும், 1000 யூனிட்டுக்கு 5080 ரூபாய், 1200 யூனிட்டுக்கு 6400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போது யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தினால் மின் கட்டணம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications