சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாறுமாறாக ஏறியது தங்கம் விலை.. விரைவில் ரூ.50000த்தை எட்டும் ஆபத்து.. அதிர்ச்சி காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10 கிராம் தங்கம் இந்தியாவில் ரூ.50 ஆயிரத்தை தொடும் ஆபத்து உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் எதுவே நாடு முழுவதும் திறக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படுவதற்கு முதல் நாளான மார்ச் 23ம் தேதி ஒரு சவரன் (22 கேரட்) தங்கம் ரூ.31,616க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 3952க்கும் விற்பனையானது. ஆனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் தங்கம் விலை உலக சந்தையில் தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

 மக்களுக்கு நற்செய்தி: 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 14 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் இல்லை! மக்களுக்கு நற்செய்தி: 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 14 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் இல்லை!

மாறிய விலை நிலவரம்

மாறிய விலை நிலவரம்

தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூ.35,576க்கும், ஒரு கிராம் ரூ.4,447க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்னு அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறினார்கள். இந்தியா முழுவதும் எந்த நகைகடையும் திறக்கவில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் இல்லை. எனினும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்துக்கு நகை

திருமணத்துக்கு நகை

கொரோனா பயங்கரமாக பரவி வருவதால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஏறுமாறாக தங்கம் விலை கொரோனாவை விட அதிக வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது என்பது மக்களுக்கு கனவாகி வருகிறது. வழக்கமாக வைகாசி மாதம் நிறைய திருமண முகூர்த்தங்கள் இருக்கும். அத்துடன் நிறைய திருமணங்கள் ஊரடங்கு முடிந்த பிறகு வைக்கலாம் என்று தள்ளி வைத்துள்ளார்கள். மக்கள் மே மாதம் பிறந்து ஊரடங்கு தளர்ந்த பிறகு நகைக்கடைக்கு செல்லும் எப்போது இதுவரை பார்க்காத உச்சத்தை தங்கம் விலை எட்டுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் வரை அதிகரிக்கும்

50 ஆயிரம் வரை அதிகரிக்கும்

கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கி ஓராண்டில் மட்டும் தங்கம் விலை சுமார் 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. சரசாரி என்று பார்த்தால் தங்கம் விலை சவரனுக்கு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆனால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது திருமணத்திற்காக நகை சேர்க்கும் பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உலக சந்தையில் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.50ஆயிரத்தை தொடும் ஆபத்து உள்ளதாக தங்கம் நகை வியாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வியாபாரிகள் விளக்கம்

வியாபாரிகள் விளக்கம்

சென்னை தங்கம் வைரம் வியாபரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தங்கம் விலை கிராமக்கு 495 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 3690 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை இப்போது ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய ஏற்றம். பொருளாதாரம் சீராகாத வரையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் வரும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் 36000 த்தை கடந்து விற்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.

English summary
Gold set to hit Rs 50,000-60,000 per 10 grams in India on global recession fears
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X