பத்திரப்பதிவு: நிலம், சொத்துக்களை வாங்கியோருக்கு ஆடி 18-ல் ஹேப்பி நியூஸ் வருமா? பெயிராவின் கோரிக்கை
சென்னை: திமுகவின் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், இதுவரைக்கும் கிட்டத்தட்ட 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியிருக்கிறது. தமிழக வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது என்று அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பெருமிதமாக கூறியிருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தமிழக பதிவுத்துறைக்கு பெயிரா முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது வழக்கமாகும்.. குறிப்பாக, சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவேதான், முகூர்த்த நாளில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

சுபமுகூர்த்த தினங்கள்
இதுபோன்ற சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
இதையே, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என சொல்லப்படும் பெயிராவும் தொடர்ந்து வலியுறுத்தியபடி வருகிறது.. இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும் என்றும் தெரிவித்து வருகிறது...
கூடுதல் டோக்கன்கள்
அந்தவகையில், தற்போதும், பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி எழுதியுள்ள கடிதத்தில் உள்ளதாவது:
"நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு எனும் ஆடி 18 நன்னாள் எதிர்வரும் அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை 03.08.2025 அன்று கொண்டாடப்படவிருக்கின்றது. ஆடிப்பெருக்கு எனும் சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.
சார் பதிவாளர் அலுவலகங்கள்
ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03.08.2025 அன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிடும் வகையிலும் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பல மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் அலுவலர்களாக பணி புரிந்து வருவதனை கவனத்தில் கொண்டு, அரசு விடுமுறை தினமான இந்நன்னாளில் பதிவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே அறிவிப்பினை வெளியிடுவதன் மூலம் அலுவலர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன் வழங்குவதில் பற்றாக்குறை நிலவி வருவதை கவனத்தில் கொண்டு, தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க வேண்டும்.
கூடுதல் வருவாய் கிடைக்கும்
இதன்மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். எனவே, பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்டவைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, இந்நன்னாளில் பத்திர பதிவு செய்ய விரும்பும் அனைத்து மக்களும் மகிழ்வுறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று டாக்டர்.ஆ.ஹென்றி தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications