வானத்தில் சுவாரசிய மாற்றம்! இன்று புரட்டி எடுத்ததை போல.. நாளை சென்னையில் மழை பெய்யுமா? ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து நாளை சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே சென்னையில் கனமழை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது. அதிகாலை 7 மணிக்கு பின் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 1 மணி நேரம் விட்ட மழை மீண்டும் 8 மணிக்கு தொடங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 12 மணி வரை மழை பெய்தது. மீண்டும் 2 மணி நேரம் விட்ட மழை இப்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.

Will it rain tomorrow also in Chennai and other parts of Tamil Nadu?

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து உள்ளது.கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் விடாமல் பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

முக்கியமாக சென்னையில் 10 நாட்களாக விடாமல் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் அதிகாலையில் அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை எப்படி?: இதையடுத்து நாளை சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. அதன்படி நாளையும் கனமழை பெய்யும். நாளை அதிகாலை இதேபோல் பெய்யும். நாளை மட்டுமின்றி அடுத்த 3 நாட்களுக்கு இதேபோல் மழை பெய்யும்.

Will it rain tomorrow also in Chennai and other parts of Tamil Nadu?

வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்டு உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் இதன் காரணமாகவே மழை பெய்யும். பொதுவாக வங்கக்கடலின் மேல் பகுதியில் இருக்கும் சூடான காற்று மேலே செல்லும். இந்த காற்று மேலே செல்ல செல்ல காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.

மேலே செல்ல செல்ல இந்த காற்றின் வெப்பம் குறைந்து வெப்பநிலை குறையும். அதன்பின் இந்த காற்று பொதுவாக ட்ரோபோஸ்பியர் பகுதியில் இவர்ந்து மேலே செல்லும். அதன்பின் இதே காற்று மேற்கு திசையில் நகரும்.

14 கிமீ உயரத்தை அடைந்ததும் இந்த காற்று இப்படி நகர்வதைத்தான் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பார்கள். இந்த காற்று மூலம் வரக்கூடிய மழை மேகங்கள்தான் வங்கக்கடலில் மழையை கொடுக்கும். இதுதான் தற்போது சென்னைக்கு மேலே வந்த நிலையில் மழையை கொடுத்துள்ளது.

நாளையும் இதன் காரணமாகவே சென்னையில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+