ஆரவ், அயானுக்கு என்ன பதில் சொல்வது? அறிக்கையில் ஆதங்கத்தை கொட்டிய ஆர்த்தி! மனம் மாறுவாரா ஜெயம் ரவி?
சென்னை: ஆர்த்திக்கு பெருகும் ஆதரவை அடுத்து தனது விவாகரத்து முடிவை மறுபரிசீலனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆர்த்திக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லாததால் ஜெயம் ரவியால் நீதிமன்றத்திற்கு சென்றாலும் எதையும் செய்ய முடியாது என்கிறார்கள்.
ஜெயம் என்ற முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ரவி. இவர் எடிட்டர் மோகனின் மகன், இயக்குநர் ராஜாவின் தம்பி. தனது அண்ணனின் இயக்கத்தில் ரவி நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார்.

புதுமுக நாயகனாக ரவிக்கு உனக்கும் எனக்கும் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு சாக்லேட் பாய் என்ற இமேஜை கொடுத்து பெண் ரசிகர்களையும் குவிக்க செய்தது.
காமெடியன், ஆக்ஷன் ஹீரோவுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம், ஜெயம் ரவிக்கு நல்லதொரு பெயரை கொடுத்தது. இந்த படத்தில் நடித்த போதுதான் தனது தாய், தந்தை, மனைவி, ஆகியோருடன் இணைந்து ஜெயம் ரவி பேட்டி கொடுத்தார். அப்போது இருவரது காதலும் எந்த அளவிற்கு இருந்தது என தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்றும் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடனான வீடியோக்களையும் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இது அவசர கதியில் எடுத்த முடிவல்ல. என்னை சுற்றியிருப்போரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. ரசிகர்கள் தொடர்ந்து எனக்காக ஆதரவை தாருங்கள் என கேட்டிருந்தார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தனது பிறந்தநாளும் அதுவுமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது வரும் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அதில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். விவாகரத்து குறித்து என்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக ரவி எடுத்த முடிவு இது. நான் அவரை சந்திக்க பலமுறை முயன்றும் அது முடியவில்லை. என் கணவர் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அது எனக்கும் என் குழந்தைகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போல் பொதுவெளியில் எந்த கருத்தையும் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. எனினும் நான் அமைதியாக இருந்தால் என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்றாகிவிடும் என்பதால் நான் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
ஆர்த்தியின் அறிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சினிமா விமர்சகர்கள் கூறுகையில், பொதுவாக விவாகரத்து என்பது கணவனும் மனைவியும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஆனால் ஜெயம் ரவி விவகாரத்தில் அது போல் நடக்கவில்லை என ஆர்த்தி சொல்வதிலிருந்தே தெரிகிறது.
அநேகமாக ஜெயம் ரவி தமிழகத்திலேயே இல்லை, வேறு மாநிலத்தில் இருக்கிறார் போல! விவாகரத்து குறித்து குடும்ப நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் சமாதான பேச்சு பேசி வந்ததால் அவர் வேறு மாநிலத்திற்கு கிளம்பி விட்டார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்த்தியின் அறிக்கையில், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் என்ன வழி என்பதை கேட்பதாகவே தெரிகிறது. இரு குழந்தைகளின் தாயின் ஆதங்கமாகவே ஆர்த்தியின் அறிக்கையை பார்க்கிறோம். எனவே தனது முடிவை ஜெயம் ரவி கைவிட்டுவிட்டு எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக வாழ்வதற்கு எப்படி சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் முக்கியமோ அது போல்தான் பிரிவதற்கும் இருவரும் பேசி பரஸ்பரமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
ஆர்த்தி என்னதான் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் அப்பா எங்கே என கேட்டால் அவருடைய குழந்தைகளுக்கு அவர் என்ன சொல்வார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இவ்வாறு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications