சட்டசபை தேர்தலில் வைகோ போட்டி? எந்த தொகுதி தெரியுமா? தீப்பிடிக்க போகும் தீப்பெட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கட்சியினரும் வைகோ போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்படி அவர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டசபை த் தேர்தலில், மதிமுக மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியில் (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி) இணைந்துள்ளது.

mdmk vaiko

ஒதுக்கப்பட்ட இடங்கள்: திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சின்னம்: இதில் 3 தொகுதிகளில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்திலும், 1 தொகுதியில் மட்டும் மதிமுகவின் சொந்தச் சின்னத்திலும் (தீப்பெட்டி) போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில், தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வைகோ அவர்கள் நேரடியான உறுதிமொழியை அளிக்கவில்லை. பெரும்பாலும் அவர் தனது மகன் துரை வைகோ மற்றும் கட்சி வேட்பாளர்களுக்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் அவர் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகிறார்களாம். மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களது செல்வாக்கு இருக்கும் 10 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்துள்ளனராம். அதில் 4 தொகுதிகளை திமுக ஒதுக்கும்.

இந்த நிலையில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதால் அந்த வெற்றி உறுதி என்றே மதிமுகவினர் கூறி வருகிறார்களாம். மீதமுள்ள ஒரு தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் மதிமுக போட்டியிட போகிறது.

அந்த சின்னத்தில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மதிமுக இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கூட திமுக கூட்டணியில் மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னது. ஆனால் துரை வைகோ தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நடந்த தேர்தலில் கூட தனி சின்னமான பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றார். எனவே தனி சின்னம் என வரும் போது பிரபலம் ஒருவர் போட்டியிட வேண்டியது அவசியம். எனவே தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் வைகோ போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி உறுதி என கட்சியினர் கருதுகிறார்களாம். இதனால் வைகோவும் யோசித்து வருகிறாராம்.

வைகோ இதுவரை நேரடியாக ஒருமுறை கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. 2016-ல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால் கடைசி நேரத்தில் சாதி மோதல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தைச் சொல்லி தனது மனுவைத் திரும்பப் பெற்றார்.

வைகோ எந்த தொகுதியில் போட்டியிடுவார்?

வைகோ போட்டியிட்டால் கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. அங்குதான் மதிமுகவுக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது. பாரம்பரியமாக மதிமுகவுக்கு வாக்களிப்போரும் நிறைய பேர் உள்ளார்கள். மேலும் சாத்தூர் எம்எல்ஏவாக மதிமுகவைச் சேர்ந்த ரகுராமன் இருக்கிறார் என்பதால் இந்த தொகுதியும் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாகும் என கருதப்படுகிறது.

கடந்த 1998, 1999ஆம் ஆண்டுகளில் சிவகாசி நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரு முறையும் வென்றார். அது போல் 2009, 2014 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1978 முதல் 1996 வரை திமுக சார்பில் 3 முறையும், தற்போது (2019 முதல்) மதிமுக சார்பில் 1 முறையும் என மொத்தம் 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு 5.78 சதவீதமாக இருந்த மதிமுகவின் வாக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 0.97 சதவீதம் வாக்குகளை பெற்றது. கடந்த மக்களவை தேர்தலில் 1.28 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+