முதல்வர் ஸ்டாலின் குறி.. 'வடக்கை' வளைக்க முடிவு?.. புதிய நகராட்சி, மாநகராட்சிகள்.. வெளியான அறிவிப்பு
இன்றைய சட்டசபை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது
சென்னை: இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்ற நிலையில், நகராட்சியான தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.. இதற்கான அறிவிப்பினை தமிழக சட்டசபையில் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி போன்ற 6 மாநகராட்சிகள் உள்ளன.. இதில் கடைசியாக லிஸ்ட்டில் சேர்ந்தது திருநெல்வேலிதான்.
மேலும், பெருகும் மக்கள் தொகை காரணமாக, சில நடைமுறை சிக்கல்கள் நிர்வாக ரீதியாக ஏற்பட்டன.. எனவே, நிர்வாக வசதிக்காகவும், பல பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன... அதாவது, வேலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில், ஓசூர், ஆவடி என 15 மாநகராட்சிகள் உள்ளன...

அறிக்கை
இத்தனை இருந்தாலும், சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக திகழ்ந்து வருகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜுன் மாதம் அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், திமுக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சில பகுதியில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சி ஆகும்... சில பகுதியில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்று கூறியிருந்தார்.

மாநகராட்சிகள்
எனவே, அதற்கான அறிவிப்புகள் எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இதனிடையே, மேலும் 3 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.. குறிப்பாக, சென்னைக்கு பக்கத்தில் உள்ள, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நகரங்கள்தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும் செய்திகள் கசிந்தன.

உள்ளாட்சி தேர்தல்
இந்த 3 நகரங்களை குறித்து பார்த்தோமானால், இவை அத்தனையும் வடதமிழ்நாட்டில் அமைந்துள்ளன.. அதாவது நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலின் பெரும்பாலான இடங்கள், வடமாவட்டங்களில்தான் உள்ளன.. அந்த வகையில், தேர்தலை குறிவைத்தே மேற்கண்ட நகரங்கள் மாநகராட்சியாக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறப்பட்டன.. அநேகமாக இதற்கான அறிவிப்பும் இன்றைய தினம் வெளியாகலாம் என்று தெரிகிறது.

நிர்வாக வசதிகள்
இதைதவிர, இதனிடையே இன்னொரு செய்தியும் வந்தது.. தமிழ்நாட்டில் புதிதாக 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டது.. கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் 2 ஆக, 3 ஆக, பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக ஆட்சியில் மாநகராட்சிகள் புதிதாக உருவாக உள்ளன... இப்போது மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன...

நகராட்சி
ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும்... தற்போது 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்டிருப்பதால் அவை நகராட்சிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கான அறிவிப்புகளும் இன்றைய தினம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. இதில் நகராட்சியான தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.. இதற்கான அறிவிப்பு இன்று தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்டது.

தாம்பரம்
ஏற்கெனவே 15 மாநகராட்சிகள் உள்ள நிலையில், 16 ஆவது மாநகராட்சியாகிறது தாம்பரம..அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 5 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும் என்று நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்... காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரூராட்சிகள்
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் -கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சோளிங்கர், திருநின்றவூர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு , முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைந்து நகராட்சிகளாக மாற்றப்படும் எனவும் இன்றைய பேரவை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications