சீரியஸாகும் மேட்டர்.. "சமரசத்திற்கு" இடமில்லை.. சீமான் கைதாக வாய்ப்பு? விடாது துரத்தும் விஜயலட்சுமி!
சென்னை: நடிகை விஜயலட்சுமி புகார் காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைதாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன.
நடிகை விஜயலட்சுமி இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக நேற்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

கடந்த முறையே இது போல அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது சீமான் தரப்பில் விஜயலட்சுமியிடம் சமரசம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ்வதாக இவர்கள் சமரசம் பேசிக்கொண்டதாக் கூறப்படுகிறது.
இந்த தகவலை விஜயலட்சுமி நேற்று கொடுத்த புகாரிலேயே குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இந்த முறை அந்த சமரசத்திற்கு வழி இல்லை என்கிறார்கள். ஏனென்றால் விளக்கமான புகார் விஜயலட்சுமி மூலம் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுவிட்டதால் சமரசம் செய்ய சான்ஸ் இல்லை என்கிறார்கள்.
என்ன சொன்னார்?: நேற்று விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த சமாதானம் விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார். அதில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.
சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.
ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.
அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஷாக் புகார்; முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.
இது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். நேற்று அவர் குறிப்பிட்ட புகாரில் இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்து இருக்கிறார். இதனால் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications