பயமுறுத்தும் கொரோனா BF.7.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா "ஒர்க் ப்ரம் ஹோம்".. என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் குறித்த அச்சம் மக்கள் இடையே அதிகரித்து உள்ள நிலையில் வீட்டில் இருந்தபடி ஒர்க் ப்ரம் ஹோம் பார்க்கும் நடைமுறை மீண்டும் இந்திய நிறுவனங்களில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. அங்கு தினசரி கேஸ்கள் கோடிக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. சீனாவில் தினசரி கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகின்றனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த சனிக்கிழமை மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓமிக்ரான் என்னாவது கொரோனாவின் B.1.1.529 வகை ஆகும். இந்த ஓமிக்ரானின் கிளை வைரஸ்தான் BA.5 வகை. இதில் இருந்து உருவான இன்னொரு கிளைதான் BA.5.2.1.7. இதைத்தான் சுருக்கமாக BF.7 என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 188 கேஸ்கள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் கொரோனா குறைந்த வண்ணமே உள்ளது. 3,468 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

 கொரோனா இந்தியா

கொரோனா இந்தியா

இந்தியாவில் இதனால் இன்னும் கொரோனா கேஸ்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை. சீனாவில் தீவிரமாக கேஸ்கள் பரவினாலும் இந்தியாவில் ஏற்கனவே ஓமிக்ரான் அலை ஏற்பட்டுவிட்டதாலும், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுவிட்டதாலும் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிதாக ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 6-8 மாதங்களாக இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நீக்கி வருகிறது. வீட்டில் இருந்தபடி ஒர்க் பர்ம் ஹோம் பார்க்கும் நடைமுறையை பெரும்பாலான நிறுவனங்கள் நீக்கிவிட்டன.

ஆபிஸ் ஸ்பேஸ்

ஆபிஸ் ஸ்பேஸ்

இதனால் புதிதாக ஆபிஸ் ஸ்பேஸ் தேவைகள் அதிகரித்து உள்ளன. அதேபோல் லட்சக்கணக்கில் ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் செல்ல தொடங்கி உள்ளனர். அலுவலகம் சென்று வேலை பார்க்க விரும்பாத ஊழியர்கள் பலரை வேலையில் நீக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா அலை காரணமாக இந்தியாவில் ஒர்க் பர்ம் ஹோம் கலாச்சாரம் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஒர்க் பர்ம் ஹோம் வேண்டும் என்று ஊழியர்கள் பலர் பல்வேறு நிறுவனங்களில் கோரிக்கைகள் வைக்க தொடங்கி உள்ளனர்.

 மாஸ்க் விதிகள்

மாஸ்க் விதிகள்

முக்கியமாக மாஸ்க் விதிகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. கூட்டமான இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் மீண்டும் இந்தியாவில் ஒர்க் பர்ம் ஹோம் கலாச்சரம் பல்வேறு அலுவலகங்களில் வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முக்கியமாக ஐடி துறை, மீடியா துறை, பைனாஸ் டெக் நிறுவனங்களில் ஒர்க் பர்ம் ஹோம் வசதி மீண்டும் வருமா என்ற கேள்விகள் மக்கள் இடையே எழுந்துள்ளன. ஆனால் இப்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவில் மீண்டும் ஒர்க் பர்ம் ஹோம் பெரிய அளவில் வர வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை


இந்தியாவில் பொருளாதார மந்த நிலையில் காணப்படுகிறது. பல நிறுவனங்களில் வேலை இழப்பு பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி உள்ளன. இப்படி இருக்க ஒர்க் பர்ம் ஹோம் வசதி மீண்டும் வருவது சந்தேகம் என்ற நிலையே நிலவுகிறது. அதோடு இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிதாக உயரவும் இல்லை. தினசரி கேஸ்கள் தொடர்ந்து 200க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. அப்படி இருக்கும் போது கேஸ்கள் உயராத பட்சத்தில் இந்தியாவில் மீண்டும் ஒர்க் பர்ம் ஹோம் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

ஹார்டுவேர்ட்

ஹார்டுவேர்ட்

முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

உலக நாடுகள் பலவற்றின் கடன் அதிகரித்து உள்ளது. அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கடனும் , அரசு துறை நிறுவனங்களின் கடனும் அதிகரித்து உள்ளது. இது பொருளாதார மந்த நிலையாக மாறும். இந்த வருட இறுதியில் இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கும். டிசம்பர் ஜனவரி, மாதங்களில் அதிகரிக்கும் பண வீக்கம் காரணமாக கண்டிப்பாக விலை ஏற்றம் இருக்கும். இந்த முறை வங்கிகள், கார்பரேஷன் நிறுவனங்கள், பங்கு சந்தைகள், தனியார் நிறுவனங்கள், பண்ட் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார். அப்படி இருக்க இந்தியாவில் மீண்டும் ஒர்க் பர்ம் ஹோம் வசதி மீண்டும் வருவது சந்தேகம் என்ற நிலையே நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+