"கோட்டையில் பாமக கொடி.. இனி அன்புமணிதான் எல்லாம்".. தைலாபுரம் பிளான்.. அப்ப திமுக, அதிமுக?
கோட்டையில் பாமக கொடி பறக்கும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்
சென்னை: விரைவில் பாமக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்..!
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாமகவின் தோல்வி அதிர்ச்சியை தந்தாலும், வடமாவட்டங்களிலும் அக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அன்புமணி
கடந்த சில மாதங்களாகவே பாமக புத்துணர்ச்சி பெற்று வருகிறது.. திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகளில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.. அந்தக்கூட்டங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்திய வலிமிகுந்த வரிகளை மறந்துவிட முடியாது.. வார்த்தைக்கு வார்த்தை, பாமகவின் பலம் பற்றி சொன்னதுடன், அன்புமணியை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அவரது ஆழ்மனசு எண்ணமும் வெளிப்பட்டு கொண்டே இருந்ததை கவனிக்க முடிந்தது.

கோட்டை
ராமதாஸ் பேசியபோது, "100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும்.. 42 வருடங்கள் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன்... உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்... வயதானவர்கள் பேசத்தான் முடியும்.. இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது.. அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் தான் உள்ளது... ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகளை பெற வேண்டும்... 1 பூத்தில் ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டும்.

ஆண்ட பரம்பரை
கடலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன்.. நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம்.. இனி தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாக சென்று திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்...

60 இடங்களா?
60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி முதல்வராகி ஆள முடியும்... அன்புமணி மாதிரி ஒரு திறமைசாலி யாரும் கிடையாது.. ஆனால், ஏன் மக்கள் ஆட்சியை தருவதற்கு தயங்குகிறார்கள்? வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டுவிட்டதால், இனி ஒருமுறையாவது பாமகவிற்கு வாக்கு போடுமாறு மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.. அப்படி செய்யும்போது கோட்டையில் பாமக கொடி பறக்கும்" என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட இதே பாணி அரசியலைதான் அன்புமணியும் கையில் எடுத்து வருகிறார்..

வந்தவாசி
நேற்றுகூட, திருவண்ணாமலை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் வந்தவாசியில் நடைபெற்றது. அன்புமணி இதில் பேசும்போது, "தமிழகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.. அதனால், இந்த கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பார்கள். பாமகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது... ஆனால், தேர்தல் நேரத்தில் இதை வாக்குகளாக நாம் மாற்ற வேண்டும். வருகிற 2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியை அமைக்கும் என்று பேசியுள்ளார்.

நம்பிக்கை
நகர்ப்புற தேர்தல் முடிவை அறிந்தும்கூட, அன்புமணி இப்படி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பேசியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றாலும், பாமக தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. தற்போது, திமுகவையும் அதிகமாக எதிர்க்க முடியாத நிலைமையும் பாமக உள்ளது.. வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை முழுசாக நம்ப வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி உள்ளது..

அன்புமணி
நாளுக்கு நாள் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவதை பார்த்தால், வரப்போகும் தேர்தலில் கூட்டணி வைத்தாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. எனினும், எதற்காக சொந்த தொகுதியில்கூட அன்புமணியால் அன்று வெற்றி பெற முடியாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் அக்கட்சி மேலிடம் நுழைந்து பார்க்க வேண்டும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உற்சாகம்
அதேசமயம், ஜெய்பீம் போன்ற விஷயங்களைபோல், திரும்ப திரும்ப சாதி அரசியலை மறுபடியும் கையில் எடுத்து விடக்கூடாதே என்றும் அக்கறையுடன் ஆதங்கப்படுகிறார்கள்.. அன்புமணியே நேரடியாக தற்போது களத்தில் குதித்திருப்பதால், பாமக தொண்டர்களுக்கு உற்சாகம் கூடி வருகிறது.. களப்பணி ஜரூராக நடந்து கொண்டுள்ளது.. இதே ஸ்பீடில் போனால், விட்டதை விரைவில் பாமக எட்டிப்பிடித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!
-
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications