"சம்மட்டி அடி".. ராகுலுக்கு தில்லு.. மோடி விட்ட இடத்திலிருந்தே ஆட்டத்தை துவங்கி.. கோவையில் என்னாகுமோ
சென்னை: ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தை முற்றுகையிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதால் இன்றைய தினம் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அத்துடன், கோவையில் இன்றைய பிரச்சாரத்தில், பாஜகவுக்கான பதிலடிகள் தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
எப்போதுமே தேர்தலுக்கு முந்தைய காலத்தைவிட, "தேர்தல் சமயங்களிலும், தேர்தலுக்கு பிறகும்" பாஜகவின் ராஜதந்திரங்கள் அதிகரிப்பது வழக்கம். அதிலும் பிரச்சார நேரத்தில், தன்னுடைய செல்வாக்கை காண்பிப்பதற்காகவே பிரதமர் மோடியை அழைத்துவந்து "ரோடு ஷோ" நடத்தப்படுவதும் பாஜக வியூகங்களில் ஒன்று.
இப்படித்தான் இதற்கு முன்பும் நாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் ரோடு ஷோக்கள் நடத்தப்பட்டுள்ளன.. அவைகள் அந்தந்த தொகுதி மக்களையும் ஈர்த்திருக்கின்றன.. இதுபோன்ற "ரோடு ஷோக்கள்" பாஜகவுக்கு நிறையவே கை கொடுத்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இதெல்லாம் வடமாநிலங்களில் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறதே தவிர, தென்மாநிலங்களில் எடுபடுமா என்பது தெரியவில்லை.

என்ன காரணம்: காரணம், கடந்த வருடம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலின்போது, இப்படித்தான் பெங்களூரில் பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தப்பட்டது. ஆனாலும், பாஜக மண்ணை கவ்வியிருந்தது..
இப்போது பாராளுமன்ற தேர்தர் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோடியின் ரோடு ஷோ சமீபத்தில் நடத்தப்பட்டது. தேசிய அளவில் கோவை தொகுதி பேசப்படுவதற்கு முக்கிய காரணம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்..
பிரதமர் மோடி: ஏற்கனவே, அண்ணாமலையின் நடைபயணத்துக்காக வந்திருந்த பிரதமர், தற்போது ரோடு ஷோ நடத்தவும் கோவை வந்திருந்தார். ஆனால், இந்த ரோடு ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரண்டு வரவில்லை என்றும், மாறாக பாஜகவினரும், வட மாநிலத் தொழிலாளர்களும்தான் அதிகமாக வந்திருந்ததாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துவந்தது சர்ச்சையாகிவிட்டது.
அதேசமயம், பிரதமர் மோடி திமுகவை விமர்சித்திருந்ததை தமிழக மக்கள் கவனிக்காமல் இல்லை.. "திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, கேடுகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. திமுகவுக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். திமுக எப்போதும் அதிகார ஆணவத்தில் மூழ்கிக் கிடக்கும் கட்சி. காங்கிரஸ் - திமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது.. சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர்தான் திமுக" என்றெல்லாம் விமர்சித்துவிட்டு போயிருக்கிறார்.
அண்ணாமலை: ஏற்கனவே, அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை கோவை தொகுதியில் பிரச்சாரம் செய்துவிட்ட நிலையில், ரோடு ஷோ நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ராகுலும், ஸ்டாலினும் கோவைக்கு வரப்போகிறார்கள்.
இவர்கள் இருவரும் பொதுக்கூட்டத்தில் என்ன பேசப்போகிறார்களோ? என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தை கவ்வி வருகிறது.. அத்துடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு என்ன பதிலடியை ஸ்டாலினும், ராகுலும் தரப்போகிறார்கள் என்ற ஆர்வமும் பெருகி வருகிறது. மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிகிளைவிட, ஸ்டாலின் - ராகுல் காந்தி பங்கேற்கும் இன்றைய பொதுக்கூட்ட நிகழ்ச்சி, அரசியல் களத்தில் பேசப்பட வேண்டும் என்பதிலும் காங்கிரஸ் தரப்பு ஆர்வமாகி வருகிறதாம்.
எதிர்பார்ப்பு: மொத்தத்தில், 2 தலைவர்களுமே ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய போவது, இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வரும் 15ம் தேதி, பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும், கேரளாவில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இப்படி நேருக்கு நேர் மோதவுள்ளதால், கேரளா மாநிலத்தில் பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், கோவை பொதுக்கூட்டமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications