உரிமைத்தொகை! நாளை எடுக்கப்படும் முக்கிய முடிவு.. பட்ஜெட்டில் இந்த 2 அறிவிப்பு வந்தால்.. மாஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பின்வரும் இரண்டு முக்கியமான திட்டங்கள் குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

old pension scheme pension

அடுத்த சில வாரங்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த உரிமை தொகை உயர்த்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. கர்நாடகாவில் ரூ.1500 வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதே தொகை வழங்கப்படுகிறது. பஞ்சாப்பில் 1200 ரூபாய் பலருக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் பாஜக 2500 ரூபாய் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதால்.. இதை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

பழைய ஓய்வூதியம்

தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இது தொடர்பாக ஆய்வு பணிகளை செய்து வருகிறது.

கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+