சிஎஸ்கே வீரருக்கு செம லக்.. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் பெரிய மாற்றம்.. ஆல் ரவுண்டருக்கு செக்
சென்னை: 2021 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முக்கியமான ஸ்பின் பவுலர் நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் சிஎஸ்கே வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஐபிஎல் இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு முன்பே தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதன்பின் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தில்தான் வீரர்களின் பார்ம் குறித்த கவலை ஏற்பட தொடங்கியது.
இந்திய அணியில் தேர்வான பல முக்கியமான வீரர்கள் பார்மை இழந்தனர். முக்கியமாக சூர்யா குமார், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மோசமாக பார்மை இழந்து தவித்தனர்.

பார்ம்
ஆனால் தொடர் முடியும் நேரத்தில் மிக சரியாக இருவருமே பார்மிற்கு வந்தனர். ஆனால் இன்னும் பவுலிங் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பார்மிற்கு திரும்பவில்லை. அவர் இன்னும் பவுலிங் செய்ய தொடங்கவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் அஸ்வின் போன்ற ஸ்பின் பவுலர்களும் சரியாக ஆடவில்லை.

ராகுல் சாகர்
அஸ்வின், ராகுல் சாகர் இரண்டு பேருமே இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. முக்கியமாக ராகுல் சாகர் மும்பையின் கடைசி சில போட்டிகளில் சரியாக ஆடாத காரணத்தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ராகுல் சாகருக்கு பதிலாக சாஹலை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ஹர்திக் பாண்டியா
அதேபோல் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏற்கனவே வெங்கடேஷ் ஐயர் நெட் பவுலராக இந்திய அணிக்குள் வந்துவிட்டார். இந்த நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய பட்டியல் 15ம் தேதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சாஹல்
புதிய சில வீரர்கள் அணிக்குள் சேர்க்கப்பட்டு 15ம் தேதிக்குள் புதிய பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக இன்று இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருந்து அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் வந்துள்ளார்.

ஷரத்துல்
ஏற்கனவே அணியில் மாற்றம் வரப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில்தான் அக்சர் நீக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா பவுலிங் சரியாக செய்யாத நிலையில் ஷரத்துல் தாக்கூரை பாதுகாப்பிற்காக எடுத்துள்ளனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு இது சிக்கலாகி உள்ளது. முன்பு ஸ்டான்ட் பை வீரராக இருந்த ஷரத்துல் தற்போது அணிக்குள் வந்துள்ளார்.

மாற்றம்
2021 டி 20 உலகக் கோப்பை தொடரும் இங்குதான் நடக்கிறது. தன்னை எடுக்காத பிசிசிஐ தேர்வாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சாஹல் ஆட்டம் அமைந்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இந்திய அணியின் ஹோட்டலுக்குள் அவரும் சென்று இருப்பது பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications