சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெருசா சிக்கிய மீன்.. "இவர்"தானா?.. அங்கே போக போகிறாரா.. காரணம் என்ன? அப்ப பாஜக, அதிமுக? பரபர களம்

அதிமுகவின் சீனியர் தலைவர் சசிகலா பக்கம் தாவ இருப்பதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கனவே அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருந்தால், சசிகலா தரப்பில் இருந்து, "வெடிகுண்டு" ஒன்று டமார் என்று விழுந்துள்ளது..!

சசிகலாவின் சமீபத்திய பேட்டிகளை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், 'சசிகலா வந்தால் பாஜக ஆதரிக்கும்" என்ற நேற்றைய தினம் நயினார் நாகேந்திரன், சொன்னதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது.

அதேபோல, அதிமுகவின் சீனியர் பொன்னையன், பாஜகவையே அட்டாக் செய்து பேசியிருந்ததையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.. பொன்னையன் ஏன் இப்படி பேசினார்? யாருடைய தூண்டுதலில் இப்படி பேசினார்? என்ற சந்தேகங்களும் அப்போதே எழுந்தன.

வேகம் காட்டும் அதிமுக.. பொதுக்குழுவிற்கு முன்.. நாளை மறுநாளே மா. செக்கள் கூட்டம்.. என்ன ப்ளான்? வேகம் காட்டும் அதிமுக.. பொதுக்குழுவிற்கு முன்.. நாளை மறுநாளே மா. செக்கள் கூட்டம்.. என்ன ப்ளான்?

முனுசாமி

முனுசாமி

ஒருவேளை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செய்ய வேண்டியதை எல்லாம் பாஜக செய்து கொண்டிருப்பதால் வந்த ஆவேசமா? அல்லது தனக்கு எம்பி சீட் கிடைக்காத விரக்தியில் பொன்னையன் வெளிப்படுத்திய வேதனை கருத்துக்களா? எடப்பாடி, ஓபிஎஸ், முனுசாமி, ஜெயக்குமார் போன்ற தலைகளே பாஜக விஷயத்தில் அடக்கி வாசித்து வரும்போது, பொன்னையன் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது.

மாஸ் பிளான்

மாஸ் பிளான்

இந்த நேரத்தில்தான், சசிகலா பற்றின ஒரு தகவல் பரபரத்து வந்தது.. அதிமுகவில் ஒரு சீனியர் மாஜியை தட்டி தூக்க போகிறார் என்றார்கள்.. அதாவது, ராஜ்யசபா சீட்டுக்காக முட்டி மோதி, கடைசியில் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்திக்கு பல சீனியர்கள் உள்ளாகியிருக்கும் நிலையில், சசிகலாவின் அந்த மாஸ் பிளான் கசிந்தன.. இதை பயன்படுத்தி அதிருப்தியாளர்களிடம் சசிகலாவின் அறிவுரைபடி சசிகலா தரப்பினர் பேசி வருகிறார்கள் என்றும், முதல் கட்டமாக சிக்கியிருப்பவர்தான் ஒரு சீனியர் என்றும் சொல்லப்பட்டது..

போஸ்டிங்

போஸ்டிங்

அதுமட்டுமல்ல, அந்த சீனியர் விரைவில் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சசிகலாவின் அரசியல் ஆலோசகராக அவர்தான் நியமிக்கப்படுவார் என்றும் சசி தரப்பில் இருந்தே அந்த செய்திகள் சலசலக்கப்பட்டன. ஆனால், அவர் யார் என்று தெரியாத பட்சத்தில் ஒருவேளை, செம்மலையாக இருக்குமோ? என்ற டவுட்டும் ஓட ஆரம்பித்தது..

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஏனென்றால், எம்பி சீட் வேண்டும் என்பதற்காக செம்மலை அளவுக்கு அதிகமாக முயற்சித்தார்.. எடப்பாடியை சந்தித்து பேச சேலத்துக்கு போய் முகாமிட்டார்.. ஆனால், கடைசிவரை இவரை சந்திக்காமலேயே எடப்பாடி தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, எம்பி சீட் விவகாரத்துக்கு பிறகு, மனம் நொந்துபோய் இருப்பதாகவும் தகவல் வெளியாகின.. இப்போது விஷயம் என்னவென்றால், சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் பங்கு வெங்கடாசலம் இல்லம் திருமணவிழா நேற்று முன்தினம் நடந்தது..

அப்செட்டில் சீனியர்

அப்செட்டில் சீனியர்

இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் வந்திருந்தனர்.. இந்த கல்யாணத்துக்கு செம்மலையும் வந்திருந்தார்.. ஆனால், எடப்பாடியை பார்த்து சரியாக பேசவில்லயாம்.. அதிருப்தியும், அப்செட்டும், வருத்தம் தோய்ந்த முகமாக காணப்பட்டாராம்.. அதிருப்தியில் செம்மலை இருக்கிறார் என்று தெரிந்தும் மேலிடம் இவரை அழைத்து பேசவில்லை என்கிறார்கள்.. கட்சிக்காக பாடுபட்ட ஒரு சீனியரை இப்படி மனவேதனையில் விடுவது சரியல்ல என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

மனஸ்தாபம்

மனஸ்தாபம்

இப்படித்தான் கடந்த முறை அதிமுக ஆட்சி அமைந்தபோது, செம்மலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.. உடனே செம்மலை அணி மாற போகிறார் என்று தகவல்கள் பறந்தன.. அதாவது அப்போது தினகரன் அணி பிரபலமாக இருந்தது.. ஆனால், செம்மலையே அப்போது ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் எனக்கு இருக்கத்தான் செய்கிறது.. உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத ஆதங்கமும் உள்ளது.. அதற்காக நான் அணி மாற மாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

செம்மலை

செம்மலை

எனினும், நடக்கும் சூழல் சரியில்லை என்பதாலும், அதிமுகவின் 25 எம்எல்ஏக்களை பேரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் சசிகலா களமிறங்கியதாக தகவல்கள் பரவிவரும் சூழலில், சீனியரை கூலி செய்யும் முயற்சியில் தலைமை இறங்க வேண்டும் என்று செம்மலை தரப்பில் சொல்லி வருகிறார்கள்.. ஒருவேளை சசிகலா குறி வைத்தது, இவருக்குதானா? அல்லது வேறு யாராவது? மேலும், 14ம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட போவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்தள்ளனர்.. அப்போது என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை... பார்ப்போம்..!

 தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

அடுத்து நடைபெறும் ஆட்சி அதிமுக ஆட்சிதான் அதற்கு நான் தலைமை ஏற்பேன் என்று சசிகலா ஒருபக்கம் உறுதியுடன் சொல்லி வருநிலையில்தான், இந்த அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது... இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக இப்போது தமிழ்மகன் உசேன் உள்ள நிலையில், புதிய அவைத்தலைவர் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Will the dissidents go to the VK Sasikala side and What is the admk semmalais political plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X