சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

க்ளைமேக்ஸ் வந்தாச்சு.. "சாணக்கிய சசி".. முக்கிய புள்ளி "இவர்"தானா?.. எடப்பாடி பழனிசாமியா இப்படி?

எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் பிளானை முறிடியப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: இப்படி ஒரு தருணம் வரும் என்றுதான் சசிகலா காத்திருந்தார்.. தனக்கு சாதகமான சூழலை எடப்பாடி பழனிசாமியே ஏற்படுத்தி தந்துள்ளது சசிகலாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறப்படுகின்றன.

அதிமுகவில் 2 எம்பி சீட்டை தேர்ந்தெடுத்ததற்கே மேலிடம் படாதபாடு பட்டுவிட்டது.. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறியே நீடித்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோஷ்டியாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டனர்.

 எடப்பாடி பிரதமரை வரவேற்க ஏர்போர்ட் போனாலும்.. இது 'மிஸ்ஸிங்’.. எங்கப்பா தொண்டர்களும், கொடியும்? எடப்பாடி பிரதமரை வரவேற்க ஏர்போர்ட் போனாலும்.. இது 'மிஸ்ஸிங்’.. எங்கப்பா தொண்டர்களும், கொடியும்?

 சேலம் கூட்டம்

சேலம் கூட்டம்

தங்களின் ஆதரவாளர்களுக்கே சீட் வழங்க வேண்டும் என்பதில் இருதரப்பினரும் பிடிவாதமாக இருந்தனர்.. இதனால், சென்னையில் கூடிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பதால், எடப்பாடி சென்னைக்கு செல்லாமல், சேலத்திலேயே கடந்த வாரம் முழுவதும் முகாமிட்டிருந்தார்... 2 சீட்டுக்கு எத்தனையோ பேர் போட்டியிட்டனர்.

 செம்மலை அப்செட்

செம்மலை அப்செட்

குறிப்பாக, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இருவரும் டாப் லிஸ்ட்டில் இருந்தனர்.. இதில், சிவி சண்முகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. ஆனால், மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, மகன் ராஜ்சத்யனுக்கு எம்பி சீட் வேண்டும் என்று கேட்டார்... ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும் தனக்கு சீட் கேட்டார்.. ஜெயக்குமார், சிவி சண்முகத்துக்கு எடப்பாடி சப்போர்ட் நிறைய உள்ளது என்று தெரிந்ததால், ராஜன் செல்லப்பாவும், இன்பதுரையும், எம்பி சீட் தர வேண்டும் என்று தங்கள் ஆதரவாளர்கள் மூலம் கையெழுத்து வாங்கி, தலைமைக்கு தந்தனர்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்கு காரணம், இவர்கள் 2 பேர் மீதும் வழக்குகள் உள்ளன.. எம்பி பதவி கிடைத்து விட்டால், வழக்கில் இருந்து தப்பித்து கொள்ள ஓரளவ உதவியாக இருக்கும் என்று பலமாக நம்பினர்.. ஆனால், எதுவுமே நடக்கவில்லை.. இதனிடையே சேலம் செம்மலையும் வாய்ப்பு கேட்டார்.. இவர்தான் எடப்பாடியை அதிகமாக நம்பிக் கொண்டிருந்தவர்.. ஆனால், சேலத்துக்கு எடப்பாடி வந்தும்கூட, அங்கேயே 5 நாட்கள் தங்கியிருந்தும்கூட, செம்மலை எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது..

சசிகலா

சசிகலா

செம்மலை மட்டுமில்லை.. எடப்பாடியை சந்திதக்க ஒருவாரமாகவே சேலத்தில் முகாமிட்டிருந்த தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியோடு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்... கட்சிக்காக உழைத்தவர்களை தேர்ந்தெடுத்து சீட் கொடுக்காமல், ஆளுக்கு ஒரு பக்கம் கோஷ்டிக்கு வலுசேர்க்கும் வகையில் இருவரும் செயல்பட்டு வருவதாக அதிருப்திகள் வெடித்துள்ளது.. இதுதான் சசிகலாவுக்கு சாதகமாகி உள்ளதாம்.

 தென் மண்டலம் அப்செட்

தென் மண்டலம் அப்செட்

மேற்கு, வடக்கு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு நபர், தென் மாவட்டங்களில் ஒரு நபர் என்ற வகையில் சீட் இருக்கும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது, அதன்படியே அறிவிப்பும் வெளியாகி இருந்தாலும் பலரது மனவருத்தத்தை இந்த ராஜ்ய சபா சீட் விவகாரம் சம்பாதித்துவிட்டதாகவே தெரிகிறது. எப்படியும் ஜெயக்குமாருக்கு, தமிழ்மகன் உசேனுக்கு பிறகு அவைத்தலைவர் பதவி ரெடியாக இருக்கிறது என்றாலும், செம்மலை, கோகுல இந்திரா, வளர்மதி, இன்பதுரை, ராஜ்சத்யன் போன்றோர் கடுப்பில் உள்ளனராம்..

செம்மலை

செம்மலை

இப்படித்தான் கடந்த முறை அதிமுக ஆட்சி அமைந்தபோது, செம்மலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.. உடனே செம்மலை அணி மாற போகிறார் என்று தகவல்கள் பறந்தன.. அதாவது அப்போது தினகரன் அணி பிரபலமாக இருந்தது.. ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் உள்ளது.. உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத ஆதங்கமும் உள்ளது.. அதற்காக நான் அணி மாற மாட்டேன் என்று திட்டவட்டமாக செம்மலை கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

அவைத்தலைவர்

அவைத்தலைவர்

இதில் தென் மண்டல நிர்வாகிகள்தான் மெஜாரிட்டி அப்செட்டில் உள்ளதால், சசிகலாவின் பார்வை இவர்கள்மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா இறங்கி உள்ளார்.. போதாக்குறைக்கு, தன்னை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி வருவதாகவும் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்.. இந்த சமயத்தில், அதிமுகவில் பூசல் கிளம்பி உள்ளது.. இதற்கு நடுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்..

 சசி ஆட்டம்

சசி ஆட்டம்

இரட்டை தலைமை இருப்பதால்தானே, கோஷ்டி பூசல், ஆதரவாளர்கள் உருவாகிறார்கள்? இனி இதற்கு வேலையே இருக்க கூடாது என்பதால், கட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.. ஆனால், இதற்கு எந்த அளவுக்கு அவருக்கு இந்த சமயத்தில் சப்போர்ட் கிடைக்கும் என்று தெரியவில்லை.. "என்னை கட்சியில் சேர்த்து கொள்ள மாட்டேன் என்று சொல்ல இவர்கள் யார்" என்று சசிகலா கேட்டு வரும் நிலையில், எடப்பாடியின் முயற்சி கைகூடுமா? அல்லது அதிருப்தியாளர்களை வைத்து சசிகலா 2வது இன்னிங்ஸை தொடங்குவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Will the dissidents go to the VK Sasikala side and What is the Edappadi palanisamy Plan எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் பிளானை முறிடியப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X