"வடக்கையும்" வாரி சுருட்டும் திமுக.. "ஜெர்க்" ஆகும் அதிமுக.. திருப்பம் தர போகும் திருமா..!

வட மாவட்டங்களிலும் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடக்கு மண்டலங்களில் திமுக தடம் அதிகமாக தென்பட்டு வருவதாகவும், இது அதிமுக-பாமக கூட்டணிக்கு ஜெர்க் தந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.. வடமண்டலங்களில் நடந்த வாக்குப்பதிவு சதவீதத்தை வைத்து இப்படி ஒரு பேச்சு தமிழக அரசியலில் ஓடி கொண்டிருக்கிறது..!

கொங்கு மண்டலம் எப்படியும் தன் பிடியில் உள்ளதால் கையை விட்டு போகாது என்ற கணக்கு அதிமுக தலைமைக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.. அதனால்தான் வடமாவட்டங்களை வலுவாக்கவும், வெற்றி வாய்ப்பை தக்க வைக்கவும் பாமகவை சரிக்கட்டும் வேலையில் இறங்கியது.

வடமாவட்டங்களில் அந்த அளவுக்கு அதிமுக கூட்டணி ஆஹா ஓஹோ என்று இல்லை.. எனினும், வன்னியர் இடஒதுக்கீட்டு விஷயத்தில், வன்னியர் ஓட்டுக்கள் அப்படியே யூ-டர்ன் ஆகி அதிமுக பக்கம் விழும் என்ற மனக்கணக்கு போட்டுதான் பாமக - அதிமுக இடஒதுக்கீட்டு முடிவு எடுக்கப்பட்டது.

 அதிருப்தி

அதிருப்தி

எதை பலம் என்று நினைத்து, அதிமுக இதை செய்ததோ, அதுவே ஆகப்பெரும் மைனஸாகி விட்டது என்றும், இடஒதுக்கீட்டினால், பிற சமூகத்தினர் வடமாவட்டங்களில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள். ஆனால், இது தென்மண்டலங்களில் எதிரொலிக்கும் என்று அதிமுகவே எதிர்ப்பார்த்திருக்காது..

 கூட்டணி

கூட்டணி

இடஒதுக்கீடு கிடைத்துவிட்டதாலேயே, எல்லா வன்னியர்களும் அதிமுக கூட்டணி பக்கம் வந்துவிட மாட்டார்கள், இதில் தீவிர திமுக தொண்டர்களும் உண்டு, தேமுதிக தொண்டர்களும் உண்டு, எனவே, இடஒதுக்கீடு விஷயம் அதிமுகவுக்கு மைனஸ் என்றே அவர்கள் கணித்து சொன்னார்கள். இதையடுத்துதான், நிறைய கருத்து கணிப்புகளும் வந்தன.. அதன்படி, திமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று சொன்னாலும், பாமகவுடன் ஒப்பிடும்போது, வடமாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவு அவ்வளாக இல்லை என்பதை அந்த கணிப்பு தெளிவாக்கியது..

செல்வாக்கு

செல்வாக்கு

மேலும் பாமகவின் செல்வாக்கும் குறையாமல் உள்ளது என்றும் இந்த முறை எப்படியும் பாமக 4-க்கு குறையாமல் தொகுதிகளை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்புகள் சொல்லின. இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. நடந்து முடிந்த தேர்தலில் பாமகவின் ஓட்டுகள் அதிமுகவுக்கும், அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருக்கிறதாம்.

 பாமக

பாமக

அதேசமயம், அதிமுகவுக்கென்று நிரந்தரமாக இருக்கும் பட்டியலின வாக்கு வங்கி இந்த முறை குறைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உள் இட ஒதுக்கீடு விஷயத்தை பாமகதான் முன்னெடுத்து, விளம்பரப்படுத்தி ஓட்டு கேட்டதே தவிர, அதிமுக இதை பற்றி பெரிதாக பேசவில்லை.. எனினும், அந்த அதிருப்தியைதான் பட்டியலின வாக்கு வங்கியில் தெரிய வந்திருக்கிறது என்றும், அந்த வாக்கு வங்கிகள் அப்படியே திமுக பக்கம் திரும்பி வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 விசிக

விசிக

இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. வடமாவட்டங்களில் பாமகவுக்கு அடுத்து விசிகவுக்கு இருக்கும் செல்வாக்கையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. 6 சீட்களை வாங்கி கொண்டு இந்த பக்கமே திருமாவளவன் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியதாகவும், தென் மண்டலம் பக்கமே அவர் போகவில்லை என்றும் ஒரு அதிருப்தி கிளம்பியது.. எனினும், திருமாவின் பிரச்சாரம் வடமண்டலங்களில் நன்கு கைகொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

 திருமாவளவன்

திருமாவளவன்

சிறுத்தைகளுக்கு இங்கு இருக்கும் வாக்கு வங்கியானது, இந்த முறை மேலும் கூடியுள்ளதாகவும், பாமக அதிமுக கூட்டணி மீதுள்ள அதிருப்தியினால் அப்படியே திமுக பக்கம் இது சாதகமாக திரும்பி உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாமக வடக்கில் வலுவாக இப்போது வரை இருந்தாலும், இந்த முறை திமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும், அதற்கு வேல்முருகன் மற்றும் விசிகவின் களப்பணிகளே அடிப்படை காரணமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+