ரூ.1000க்கு மேல் இபி பில் வந்தால்.. ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும்? தமிழ்நாட்டில் விரைவில் விதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ரேஷன் அட்டைகளும் கூட ஸ்மார்ட் அட்டைகள் ஆகிவிட்டன. ஆன்லைனிலும் கூட மின்சார கட்டணத்தை செலுத்த எளிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.

Will the new Electricity board rule allow you to pay only through online for EB bills more than 1000 rs?

கட்டணம் : இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.

மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.

ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

Will the new Electricity board rule allow you to pay only through online for EB bills more than 1000 rs?

ஆதார்: சமீபத்தில் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகிறது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு.

ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம்.ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும்.

நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.

Will the new Electricity board rule allow you to pay only through online for EB bills more than 1000 rs?

ஆன்லைனில் கட்டுவது எப்படி?

நீங்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் பின்வரும் முறைகளை பின் பற்ற வேண்டும்.

படி 1 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login?locale=en என்ற பக்கத்திற்கு செல் வேண்டும்.

படி 2 - உங்களுக்கு லாக் இன் இருந்தால் இந்த பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும்.

படி 3 - இல்லையென்றால் இதில் உள்ள quick pay என்ற வசதியை பயன்படுத்த முடியும்.

படி 4 - அதில் உங்கள் கஸ்டமர் ஐடியை கொடுக்க வேண்டும். உங்களின் 2 இலக்க மண்டல எண் மற்றும் 9 இலக்க கஸ்டமர் எண்ணை கொடுக்க வேண்டும். கஸ்டமர் எண் உங்கள் மின் அட்டையில் இருக்கும்.

உங்கள் மண்டல எண் என்பது நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறுபடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+