Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு ரூ.1000.. வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில்.. ரேஷன் கடையிலேயே டோக்கன் அடிப்படையில் இந்த முறையும் வழங்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரடியாக வங்கியில் செலுத்துவதில் 3 முக்கியமான சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கு தேவை. அதோடு இல்லாமல்.. வங்கி கணக்கில் அவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும்.

pongal 2023 pongal gift cm stalin bank account aadhar 2023 pongal news

இதன் காரணமாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான ஆலோசனைகளை.. நல்லவை தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பணம் தவிர பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து.. பெரும்பாலும் 27ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கண்ட 3 விஷயங்கள் காரணமாக நேரடியாக பணம் செலுத்த வேண்டாம் என்ற திட்டத்தில் தமிழக அரசு உள்ளதாம். வங்கி கணக்குகளை சோதனை செய்ய.. அதை முறையாக வகைப்படுத்த போதிய அவகாசம் இல்லை என்பதும் ஒரு காரணம் ஆகும்.

பொங்கல் பரிசு:

ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகையில் வெல்லம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முடிவை இந்த வாரமே தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் சார்பாக இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

என்னெவெல்லாம் வழங்கப்படும்?:

பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது,மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.இந்த வருடம் கரும்பு வழங்கப்படும்,

உள்ளாட்சி தேர்தல்: அடுத்த வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ரேஷன் கார்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படும். அதில் நேரம், தேதி இருக்கும். அந்த நாளில் மட்டும் சென்று பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+