அனைத்து ஊடகவியாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகை .. வலுக்கும் கோரிக்கை.. தமிழ்நாடு அரசு என்ன செய்யலாம்?
சென்னை: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியபடி அனைத்து ஊடகவியாளர்களுக்கும் கொரோனா நிவராண நிதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து செயலாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் முன்கள பணியாளர்கள் என்ற பட்டியலில் உள்ளனர்.
இந்த பட்டியலில் சமீபத்தில் இணைக்கப்பட்டவர்கள் ஊடகவியாளர்கள். கொரோனா தடுப்பு பணியில் ஊடகவியாளர்கள் பங்கு அளப்பரியது.

ஊடகவியாளர்கள்
கொரோனா பாதிப்புகள், மருத்துவமனைகளின் உள்ள கள நிலவரம், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் நிறை, குறைகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்து கூறி வருபவர்கள் ஊடகவியாளர்கள். கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர். பொதுவாக செல்லபோனால் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செய்லபடுகின்றனர் ஊடகவியாளர்கள்.

அரசு நிவாரண தொகை
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊடகவியாளர்களை முன்கள பணியாளர்களை சேர்த்து இருப்பது மிகவும் பொருத்தமானது; தகுதியானது. ஊடகவியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் ஏதேனும் ஊடகவியாளர்கள் உயிரிழக்கும்போது அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

அரசியல் தலைவர்கள் கோரிக்கை
இது மிகவும் பாராட்டத்தக்க செயல் என்ற போதிலும் அனைத்து ஊடகவியாளர்களுக்கும் கொரோனா உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சீமான் முதல் திருமாவளவன் வரை அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. அனைத்து ஊடக நிறுவனங்களிலும் தமிழக அரசால் அங்கீகரிக்கபட்ட ஒரு சில ஊடகவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

யார், யார் பயனடைகிறார்கள்?
இந்த அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியாளர்களுக்கே தற்போது அரசின் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் அனுபவம் வாய்ந்த ஒரு சிலரே இந்த அடையாள அட்டைகளை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் கொடுக்கும் ஊதியம் அவர்களின் குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது.

குறைவான ஊதியம் பெறுபவர்கள்
இதனால் இவர்களில் பெரும்பாலானோர் அரசின் நிதியுதவியை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஒவ்வொரு ஊடக, பத்திரிக்கை நிறுவனத்திலும் இதுபோல் அதிக ஊதியம் பெறுபவர்கள் வெகு சிலரே. பெரும்பாலான ஊழியர்கள் அவர்களை விட குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்க்கையை கடினமுடன் நகர்த்தி வருகின்றனர்.

நியாயம் இருக்கிறது
எனவே இதுபோன்ற ஊடகவியாளர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் அரசியல் தலைவர்கள் அரசிடம் வைத்துள்ளனர். அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஆனால் சில சிக்கல் இருக்கின்றன
ஆனால் அரசியல் தலைவர்கள் கூறியபடி அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இப்போது அரசு அனுமதி பெற்ற பத்திரிக்கை, ஊடக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மிக அதிகம். இதனால் அனைவருக்கும் எப்படி நிவராண தொகை கொடுக்க முடியும் என்று யோசிக்க வைக்கிறது.

இப்படி யோசிக்கலாம்
ஆனால் இந்த நிவாரண தொகையை அரசு வேறு வழியில் கொடுக்கலாம். அதாவது அனைத்து ஊடக, பத்திரிகை நிறுவனங்களில் களப்பணியாற்றும் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களின் மாத ஊதியத்தை கையில் எடுத்து குறைவான சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு முழுமையான உதவித்தொகையை வழங்கலாம். தங்களது குடும்பத்தை நடத்த சிறப்பாக நடத்தும் அளவுக்கு ஊதியம் பெறும் ஊடகவியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையை கொஞ்சம் குறைத்து வழங்கலாம். இதன் மூலம் அனைவருக்கும் நிவாரண நிதி கிடைத்த மாதியும் இருக்கும். அரசுக்கு நிதி சுமை குறைந்த மாதிரியும் இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கோரிக்கையை அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications