மாவட்ட செயலாளர் மாற்றம் இருக்குமா? எதிர்நோக்கி இருக்கும் உ.பி.க்கள்! என்ன முடிவெடுப்பார் ‘தலைவர்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் ஒரு சில அமைப்பு மாவட்டங்களில் சிறப்பாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டுமென உடன்பிறப்புகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகள் தவிர்த்து மற்ற மாநகராட்சி பகுதிகளுக்கான வார்டு வரையறையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

திமுக உட்கட்சி தேர்தல்

திமுக உட்கட்சி தேர்தல்

திமுகவின் உட்கட்சி தேர்தல் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிளைக் கழக தேர்தல்கள் முடிந்து விட்டன. அவற்றில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு தேர்வு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் பேரூர், நகர செயலாளர்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு விட்டன. அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

நியமன பட்டியல்

நியமன பட்டியல்

தற்போது மாநகர, வட்ட செயலாளர் தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் நடைபெற்று வருகின்றன. பகுதி செயலாளர் நியமன பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் ஒன்றிய செயலாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் என தெரிய வருகிறது. இந்த தேர்தல்கள் முடிவற்ற பின்னர் மாவட்ட செயலாளர் தேர்தல், அதன்பிறகு திமுகவின் தலைவர் பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

புதிய நிர்வாகிகளுக்கான பட்டியலுக்கு பொது குழுவில் ஒப்புதல் பெற்றபின் இந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது திமுகவின் தேர்தல் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் பேரூர் ஒன்றியம் வார்டு செயலாளர் பதவிகளைப் பொருத்தவரை ஏற்கனவே திமுகவில் இருந்த 90 சதவீதம் நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிர்வாகிகளுக்கு இளைஞர் அணி மகளிர் அணி இலக்கிய அணி உள்ளிட்ட சார்பு அணிகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் கட்சி முக்கிய பதவிகளை விட இளைஞர் அணி பதவிகளை கைப்பற்றுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் ஏற்கனவே இருக்கும் ஒன்றிய செயலாளர்களை மீண்டும் நியமிக்க தலைமை உத்தரவிட்டுள்ளதால் அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் தமிழகத்திலேயே திண்டுக்கல் ஒன்றியத்தில் மட்டும் தான் நெடுஞ்செழியன் என்பவரை எதிர்த்து கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் குறிப்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில் உட்கட்சி பூசல் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது சுமார் 240க்கும் மேற்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் ஒன்றியம்

திண்டுக்கல் ஒன்றியம்

கட்சியில் உள்ளூர் நிர்வாகிகளை மதிப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நெடுஞ்செழியன் மீது வைக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னால் இந்நாள் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் யூனியன் சேர்மன் உள்ளிட்ட பலரும் அவருக்கு எதிராக களம் இறங்கி தேர்தலில் போட்டியிட காத்திருக்கின்றனர். பட்டியல் வெளியான பின்பு தொண்டர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதா இல்லையா என்பது தெரிய வரும்.

 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

இந்த நிலையில் தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஒரு சில மாவட்டங்களை மாவட்ட செயலாளர் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் மாவட்ட செயலாளருக்கும் பிரச்சனை இருக்கிறது. இதேபோல தேனி மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லிலும் ஒரு சில மூத்த நிர்வாகிகள் தற்போது பழனி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனுமான ஐபி செந்தில் குமார் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு

தொண்டர்கள் எதிர்பார்ப்பு

தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பழனி தொகுதியிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் அவர் கட்சிக்காக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பகுதிகளில் இதுவரை கண்டு கொள்ளவில்லை என்றும் மாவட்ட அளவிலான போராட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல்லில் நடைபெற்றால் மட்டுமே செந்தில்குமார் கலந்து கொள்வதாகவும் இதனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட மக்களை சந்திக்க முடியவில்லை எனவும் இதனால் தொண்டர்களும் பொதுமக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் முழு நேரமாக கட்சி பணியாற்றும் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல மத்திய மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வரும் நிலையில் திமுக தலைவர் தொண்டர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+