"லிஸ்ட் எடுங்க".. கூல் தலைவரின் சைலண்ட் அதிரடி.. எதிர்பார்ப்பில் சசிகலா.. வேடிக்கை பார்க்கும் அதிமுக
அமமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது
சென்னை: நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..!
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
அதேபோல, பிரதான கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன..
அதன்படி, பாமக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. அதேபோல, தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... 25-ம்தேதி முதல் கமல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

பாஜக
பாஜக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், அதே கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.. பாமகவை தவிர்த்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க போவதாக அதிமுக நேற்றைய தினம் அறிவித்து விட்டது.. காங்கிரஸ் கட்சியும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது.

அமமுக
ஆனால், அமமுக மட்டும் சத்தமே இல்லாமல் உள்ளது.. அதேசமயம், இதே அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவோ தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. கடந்த முறையே, அனைத்து கூட்டணி கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில்தான், கடைசி நேரத்தில் அமமுகவில் தேமுதிக இணைந்தது.. நாயுடு சமுதாய ஓட்டுக்களை குறி வைத்து தினகரன், தேமுதிக மீது கணக்கு போட்டார்.. தென்மண்டல வாக்குகளை தினகரனை வைத்து அள்ள தேமுதிக கணக்கு போட்டது.. கடைசியில் இரண்டுமே தோல்வியை சந்தித்தது.

தினகரன்
தேமுதிகவுக்காக தினகரன் முழுமையாக பிரச்சாரம்கூட செய்யவில்லை என்றார்கள்.. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாததால், பிரேமலதா மட்டுமே தன் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. தேர்தலுக்கு பிறகும் தேமுதிக - அமமுக கூட்டணி பெரிதாக வலுக்கவில்லை.. இதனிடையே, விஜயகாந்த்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்திப்பதும், உதயநிதி, விஜயகாந்த்தை சந்தித்து ஆசி வாங்குவதும் என வேறு ரூட்டில் அரசியல் பயணம் துவங்கியது.

குழப்பம்
இப்படிப்பட்ட சூழலில்தான் தேமுதிக தனித்து போட்டி என்று சொல்லிவிட்டது.. அப்படியானால் தினகரன் தனித்து போட்டியிடுவாரா? என்ற தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.. கட்சியில் போட்டியிடுகிறோமா இல்லையா என்றுகூட தெரியாத ஒரு குழப்பம் அமமுகவுக்குள் ஏற்பட்டு வருகிறது. தன்னுடைய மகள் திருமணத்தில் தினகரன் இத்தனை நாளும் பிஸியாக இருந்ததால், ஒருவேளை இனிமேல் தேர்தல் குறித்து முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சசிகலா
அதுமட்டுமல்ல, 9 மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆய்வு செய்து, தகுந்த வேட்பாளர்கள் லிஸ்ட்டை பட்டியலை தயாரிக்குமாறு நிர்வாகிகளிடம் தினகரன் சொல்லி உள்ளதாகவும் ஒரு தகவல் கசிகிறது.. இப்படிப்பட்ட சூழலில் சசிகலா என்ன மாதிரியான முடிவில் இருக்கிறார்? தினகரன் - சசிகலாவுக்கும் இடையே உள்ள லேசான அதிருப்தி விலகிவிட்டதா? என்று தெரியவில்லை..

பிரச்சாரம்
அமமுக உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுவதில் சசிகலாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.. அதிமுகவை மீட்க போராடி கொண்டிருக்கும்போது, சசிகலாவில் அமமுவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்பதுதான் கடந்த தேர்தலிலும் நாம் கண்ட நிஜம்.. இப்போது ஒருவேளை தினகரன் தேர்தலில் களமிறங்கினால், அதற்கும் நிச்சயம் சசிகலா பிரச்சாரம் செய்ய வரமாட்டார் என்றே தெரிகிறது.. எதுவானாலும் தினகரன் எடுக்க போகும் முடிவில்தான் உள்ளது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications