தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.. அதிமுகவுடன் போகுமா? செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறியுள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா 120 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ள நிலையில், ஒரு வேளை தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது.

Sengottaiyan Responds

நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் கடைசி தேர்தல்

கருத்துக்கணிப்புகளை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று உங்களுக்கும் தெரியும். குழந்தைகள் முதல் முதன்முறை வாக்காளர்கள் வரை அனைவரும் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் மக்கள் எதிர்பார்த்தப்படி விஜய் ஆட்சி அமைப்பார்" என்று பேசினார்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேசியது பற்றி கூறுகையில், நயினா நாகேந்திரனை பொறுத்தவரை இது தான் அவருக்கு கடைசி தேர்தல்.. இந்த தேர்தலுக்கு பிறகு நயினார் நாகேந்திரனுக்கு கட்சிப் பதவி இருக்குமா இல்லையா என்பது தெரியாது. மேலிடம் சொல்லும்" என்று பதில் அளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணியா?

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதிமுகவுடன் போகுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலை இல்லை. 150 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அது தான் இந்த தமிழ்நாட்டின் இலக்காக இருக்கிறது. மக்களுடைய மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது.

நான் நேற்று கூட மால் ஒன்றிற்கு போயிருந்தேன். அங்கே ஒரு நூற்றுக்கணக்கான பேர் என்னை வரவேற்று பேசினர். விமானத்தில் சென்றேன். அப்போது என் பக்கத்து இருக்கையில் இருந்த சுமார் 15 பேர் என்னுடன் செல்ஃபி எடுத்தனர். இது எல்லாம் வியக்கத்தக்க ஒன்று. இதுவரையிலும் நான் காணாத ஒன்றை கண்டேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+